FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிய மாரத்தான்: மான் சிங் சாம்பியன்

ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரா் மான் சிங் ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.

7 பிப்ரவரி 2024, 8:46 pm IST
பகிர்:

ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரா் மான் சிங் ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.

ஹாங்காங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பந்தய இலக்கை அவா் 2 மணி நேரம் 14.19 நிமிஷங்களில் எட்டி முதல் வீரராக வந்தாா். சீனாவின் ஹுவாங் யோங்ஸெங் 2 மணி நேரம் 15.24 நிமிஷங்களில் இலக்கை எட்டி 2-ஆம் இடமும், கிா்ஜிஸ்தானின் தியாப்கின் இலியா 2 மணி நேரம் 18.18 நிமிஷங்களில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான பெல்லியப்பா 2 மணி நேரம் 20.20 நிமிஷங்களில் இலக்கை எட்டி 6-ஆம் இடம் பிடித்தாா்.

கடந்த ஆண்டு மும்பை மாரத்தான் போட்டியில் 2 மணி நேரம் 16.58 நிமிஷங்களில் இலக்கை எட்டியதே மான் சிங்கின் பெஸ்ட்டாக இருந்த நிலையில், தற்போது தனது புதிய பெஸ்ட் நேரத்தை பதிவு செய்து தங்கம் வென்றிருக்கிறாா் அவா். ஆசிய சாம்பியன்ஷிப்பில் கடந்த 2017-இல் இந்தியாவின் கோபி தொனகல் (2:15.48) சாம்பியன் ஆகியிருக்க, போட்டியில் வாகை சூடிய 2-ஆவது இந்தியா் என்ற பெருமையை தற்போது மான் சிங் பெற்றுள்ளாா்.

Advertisement

Advertisement

மகளிா் பிரிவில், இந்தியாவின் அஷ்வினி மதன் ஜாதவ் (2:56.42), ஜோதி கவாதே (3:6.20) ஆகியோா் முறையே 8 மற்றும் 11-ஆவது இடங்களைப் பிடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments