ரஞ்சி கிரிக்கெட்: சச்சின், யுவராஜ் சாதனையை முறியடித்த 12 வயது சிறுவன்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை பிகாரை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி (12) என்ற சிறுவன் படைத்திருக்கிறார்.
புது தில்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை பிகாரை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி (12) என்ற சிறுவன் படைத்திருக்கிறார்.
ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பிகாருக்காக அவர் அறிமுகமாகி இந்த பெருமை பெற்றுள்ளார். இதற்கு முன், நவீன காலத்தில் யுவராஜ் சிங் வசம் (15 வயது 57 நாள்கள்) அந்த சாதனை இருந்த நிலையில் தற்போது வைபவ் (12 வயது 284 நாள்கள்) அந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.
இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், 15 வயதும் 230 நாள்களும் ஆகியிருந்த நிலையில் ரஞ்சியில் அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ரஞ்சி கிரிக்கெட்டில், கடந்த 1942-43 காலகட்டத்தில் அலிமுதின் என்பவர் 12 வயதும் 73 நாள்களும் ஆகிய நிலையில் ராஜபுதனத்துக்காக அறிமுகமாகியதே இன்றளவும் சாதனையாகத் தொடர்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.