FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நிறைவடைந்தது சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந் படப்பிடிப்பு..! விரைவில் முதல் பார்வை போஸ்டர்!

நடிகர் சிவ ராஜ்குமார் உடன் அபிஷன் ஜீவிந் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து...

சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந் படப்பிடிப்பு விடியோ. - படங்கள்: எக்ஸ் / டிராமா கம்பெனி
பகிர்:

நடிகர் சிவ ராஜ்குமார் உடன் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. விரைவில் படத்தலைப்பு, முதல் பார்வை போஸ்டர் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

டூரிஸ் ஃபேமலி திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அபிஷன் ஜீவிந் அறிமுகமானார். பின்னர், கதநாயகனாக வித் லவ் படத்தில் அசத்தினார்.

டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் சிவ ராஜ்குமார், அபிஷன் ஜீவிந், ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தலைப்பு, முதல் பார்வை போஸ்டர் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை விடியோ வெளியிட்டு கூறியுள்ளதாவது:

சிவ ராஜ்குமார், அபிஷன் ஜீவிந் உடனான அற்புதமான தருணங்களை உருவாக்கினார்கள். டிராமா கம்பெனி தயாரிப்பில் முதல் படம்.

இந்தப் பயணம் மகிழ்ச்சி, சகோதரத்துவம், காதல், சிரிப்பு, தொடர்ச்சியான உழைப்பு என எப்போதும் நினைவுகளைக் கொண்டாடும் வகையில் நிரம்பியுள்ளது. விரைவில் படத்தலைப்பு, முதல் பார்வை போஸ்டர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

summary

Shiva Rajkumar X Abishan Jeevinth Shooting wrap, First Look & Title Announcement Soon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments