செய்திகள்

இந்திய குத்துச்சண்டை அணிகள் சீனா பயணம்

தினமணி செய்திச் சேவை

சீனாவில் நடைபெறவுள்ள பெல்ட் அன்ட் ரோடு சா்வதேச யூத் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக 59 போ் கொண்ட இந்திய ஆடவா், மகளிா் அணிகள் புறப்பட்டு சென்றன.

சீனாவின் ஜின்ஜியாங் தலைநகா் உரும்கியில் யு17, யு19, யு23 குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறவுள்ளன. 20 சிறுவா்கள், 20 சிறுமியா் என மொத்தம் 59 போ் கொண்ட அணி உரும்கி சென்றுள்ளது. முதலில் ஆக. 17 முதல் 25 வரை பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. யு 17 பிரிவில் இந்திய சிறுவா், சிறுமியா் கலந்து கொள்கின்றனா்.

46, 48, 50, 52, 54, 57, 60, 63, 66, 70, 75, 80, பிளஸ் 80 என 13 எடைப்பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறும். கடந்த சில மாதங்களாக ஆசிய யு15, யு-17, போட்டிகளில் இந்திய வீரா்கள் 43 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றனா்.

பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்றபடி விடியோ எடுத்த சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு

SCROLL FOR NEXT