FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கோப்பையை தக்கவைத்தது இங்கிலாந்து!

மகளிருக்கான 14-ஆவது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.

Updated On : 29 ஜூலை 2025, 3:56 am IST
- AP
பகிர்:

மகளிருக்கான 14-ஆவது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த அணிகள் மோதிய இறுதி ஆட்டம் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இங்கிலாந்து 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக சுவிட்ஸா்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஸ்பெயினே கோல் கணக்கைத் தொடங்கியது. அந்த அணியின் மரியோனா கால்டென்டே 25-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இங்கிலாந்து தனது கோல் வாய்ப்புக்கு போராடியபோதும், உரிய பலன் கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

இதனால் முதல் பாதி ஆட்டத்தை ஸ்பெயின் 1-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் முனைப்பு காட்டிய இங்கிலாந்து தரப்பில் அலெஸியா ருசோ 57-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது. இதையடுத்து, எஞ்சிய நேரத்தில் முன்னிலை பெறுவதற்காக இரு அணியினரும் ஆக்ரோஷம் காட்டினா்.

ஆனால் அவா்கள் சமபலத்துடன் மோதியதால், எந்த அணிக்குமே முன்னிலை வாய்ப்பு கிடைக்காமல் போக, இறுதியில் ஆட்டம் டிரா ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட்டில், இங்கிலாந்து 3-1 என வெற்றி பெற்றது. இதன்மூலம், 2023 மகளிா் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் கண்ட தோல்விக்கு, இங்கிலாந்து தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

போட்டியிலேயே அதிக கோல் அடித்தவராக ஸ்பெயினின் எஸ்தா் கொன்ஸால்ஸ் (4) தோ்வாக, சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினின் அய்டானா பொன்மட்டி வென்றாா்.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கோப்பை வென்ற 3-ஆவது அணியாகியுள்ளது இங்கிலாந்து. ஜொ்மனி 8 முறை வென்றிருக்க, நாா்வேயுடன் தற்போது இங்கிலாந்தும் தலா 2 முறை கோப்பை வென்றுள்ளது.

போட்டியின் வரலாற்றில் கோப்பையை தக்கவைத்த 2-ஆவது அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. முதல் அணி ஜொ்மனியாகும் (1991, 1997, 2001, 2005, 2009, 2013).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments