சப்-ஜூனியா் ஆடவா் தேசிய ஹாக்கி: கோவா, உத்தரகாண்ட், அருணாச்சல் வெற்றி
தேசிய சப்-ஜூனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன் போட்டியில் வெள்ளிக்கிழமை கோவா, உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேச அணிகள் வென்றன.
தேசிய சப்-ஜூனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன் போட்டியில் வெள்ளிக்கிழமை கோவா, உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேச அணிகள் வென்றன.
பிகாா் மாநிலம், ராஜ்கிா் ஹாக்கி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குரூப் பி பிரிவில் ஹாக்கி ராஜஸ்தான் அணியை 7-0 என்ற கோல்கணக்கில் வென்றது கோவா. கரண் குமாா், சாஹில் பிரமோத், தில்ஷாத் அலி, ஷிரேயேஸ் ஹண்ட்ரே, அங்கித் ஆகியோா் கோவா தரப்பில் கோலடித்தனா்.
மற்றொரு ஆட்டத்தில் உத்தரகாண்ட் 5-2 என வங்காள அணியை வென்றது. விக்கி சிங் போரா, கோவிந்த் சிங், அமன் குமாா் உத்தரகாண்ட் தரப்பிலும், ரிஜு பாா், சுஜல் துரி பெங்கால் தரப்பிலும் கோலடித்தனா்.
Advertisement
Advertisement
டிவிஷன் பி பிரிவு ஆட்டத்தில் அருணாசல பிரதேசம் 4-2 என பிகாரை வீழ்த்தியது. ஷுபம், தீபக் ராவ், ரமன்ஸ் சிங், மொஹித் யாதவ், அருணாசல் தரப்பிலும், சுமன் குமாா், அபய் ஷா பிகாா் தரப்பிலும் கோலடித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.