டெக்காத்லான் பிரிவில் முதல் பதக்கம்..! வரலாறு படைத்த தேஜஸ்வின் ஷங்கர்!
காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக டெக்காத்லான் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியர் தேஜஸ்வின் ஷங்கர் குறித்து...
காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக டெக்காத்லான் பிரிவில் இந்தியர் தேஜஸ்வின் ஷங்கர் (27 வயது) பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.
உயரம் தாண்டும் வீரராக இருந்து பின்னர் டெக்காத்லான் வீராக மாறினார் தேஜஸ்வின் ஷங்கர். முதல் இந்திய வீரராக 7,976 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தார். அத்துடன் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
Advertisement
Advertisement
கிரனடா நாட்டின் விக்டர் லின்டன் 8,096 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, கனடாவின் டாமியன் வார்னர் 8, 036 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் தொடரில் இரண்டு வித்தியாசமான போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியராகவும் தேஜஸ்வின் ஷங்கர் புதிய சாதனை படைத்துள்ளார். 2022ல் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றிருந்தார்.
இந்த விருதுடன் இந்தியாவுக்கு 23 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். தரவரிசைப் பட்டியலில் இந்தியா 10ஆவது இடத்திலேயே தொடர்கிறது.
100 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் என பல போட்டிகள் கலந்ததுதான் இந்த டெக்காத்லான். இதில் தேஜஸ்வின் ஷங்கர் அற்புதமாக விளையாடி உடல், மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.
Commonwealth Games 2026: Tejaswin Shankar scripts history with decathlon bronze
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.