அடித்துக் கொலை செய்யப்பட்ட உகாண்டா கேப்டன்..! அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்!
உகாண்டா கால்பந்து அணியின் கேப்டன் டேவிட் ஓவோரி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து...
உகாண்டா கால்பந்து அணியின் கேப்டன் டேவிட் ஓவோரி (27 வயது) தெருவில் ரௌடிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உகாண்டாவின் கம்பாலா பகுதியில் பிறந்த டேவிட் ஓவோரி உகாண்டா பிரிமீயர் லீக்கில் எஸ்சி வில்லா அணியில் மிட் ஃபீல்டராகவும் கேப்டனாகவும் விளையாடி வந்தார்.
டேவிட் ஓவோரி கம்பாலாவில் இருக்கும் தனது சொந்த வீட்டில் இருக்கும்போது, திருடர்கள் அவரது செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார்கள். இதில் நடந்த மோதலில் அவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும் திருடர்கள் தப்பியோடியதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
உகாண்டாவின் தேசிய கால்பந்து அணி, “அவர் கால்பந்து வீரர் மட்டுமல்ல; அவர் ஒரு தலைவர், ஒரு தலைமுறைக்கே உத்வேகம் அளித்தவர். நாட்டின் நம்பிக்கையை தூக்கிச் சுமந்தவர்.
நாம் நமது மகனை, தலைவனை, நட்சத்திரத்தை இழந்துள்ளோம். அவர் களத்தில் இருந்ததை நாம் மறக்கவே முடியாது. இந்தப் பெரும் இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கும் எஸ்சி வில்லா அணிக்கும் அளிக்க கடவுளை வேண்டிக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளது.
இந்தக் கொலை குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். எஸ்சி வில்லா அணியும் தனது கேப்டன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
Tragedy in Uganda as footballer David Owori beaten to death in street gang attack
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.