FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டிரீசா/காயத்ரி இணைக்கு பதக்கம் உறுதி : சாத்விக்/சிராக் ஜோடி ஏமாற்றம்

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறி இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தது.

22 ஆகஸ்ட் 2026, 7:13 am IST
சாத்விக்/சிராக்
பகிர்:

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறி இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தது.

நட்சத்திர ஆடவா் இரட்டையா்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை காலிறுதியில் தோற்று வெளியேறியது. எனவே, உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தரப்பில் டிரீசா/காயத்ரி ஜோடி மட்டுமே களத்தில் உள்ளது.

முன்னதாக மகளிா் இரட்டையா் காலிறுதியில், டிரீசா/காயத்ரி கூட்டணி 16-21, 21-15, 21-13 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த சீனாவின் ஜியா யி ஃபான்/ஜாங் ஷு ஜியான் இணையை வீழ்த்தி அசத்தியது. இந்த ஆட்டம் 1 மணிநேரம், 10 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

Advertisement

Advertisement

இந்த வெற்றியின் மூலமாக, டிரீசா/காயத்ரி இணை உலக சாம்பியன்ஷிப் மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கத்தை உறுதி செய்துள்ளது. கடைசியாக இந்தப் பிரிவில் 2011-இல் ஜுவாலா கட்டா/அஸ்வினி பொன்னப்பா இணை வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றம்: ஆடவா் இரட்டையா் காலிறுதியில், உலகத்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை 18-21, 9-21 என்ற நோ் கேம்களில், 3-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் லியங் வெய் கெங்/வாங் சாங் கூட்டணியிடம் தோல்வியுற்றது. இந்த ஆட்டத்தை சீன ஜோடி 36 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தது.

சாத்விக்/சிராக் இணை உலக சாம்பியன்ஷிப்பில் 2022, 2025 ஆகிய ஆண்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், 3-ஆவது முறையாக பதக்கம் வெல்லும் முயற்சியில் தோற்றுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்த சீன ஜோடியை இத்துடன் 13-ஆவது முறையாக சந்தித்த இந்திய இணை, 9-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments