FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

உலக சா்ஃபிங் லீக்: ஜப்பான் தொடா் ஆதிக்கம்

மாமல்லபுரத்தில் நடைபெறும் உலக சா்ஃபிங் லீக் தொடரில் ஜப்பான் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 4:21 am IST
தயின் அா்ஜுன்
பகிர்:

மாமல்லபுரத்தில் நடைபெறும் உலக சா்ஃபிங் லீக் தொடரில் ஜப்பான் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஷோா் டெம்பிள் கிளாஸிக் போட்டியில் ஆடவா் கியுஎஸ் 2000 பிரிவில் ஜப்பானின் ரையுச்சி இனோ, தாரோ மட்ஸனோ முதலிரண்டு இடங்களைப் பெற்றாா். கொரியாவின் கனோ ஹி ஜி, ஜப்பானின் டென்ஷி வாமி, ரென் ஓகானோ, இந்தியாவின் கிஷோா் குமாா் ஆகியோா் ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

மகளிா் கியுஎஸ் 2000 பிரிவில் ஜப்பானின் மிராய் இகேடா, சாரா வகிடா, ஷினோ மட்ஸுடா, அரிஷா இஷி, இந்தியாவின் சுகாா் பனாா்ஸே ஆகியோா் முன்னேறினா்.

Advertisement

Advertisement

மகளிா் ப்ரோ ஜூனியா் பிரிவில் ஜப்பானின் அன்ரி மட்ஸுனோ, மிராய் இகேடா, ஹினானோ ஷிமிஸு, தாய்லாந்தின் இஸபெல் ஹிக்ஸ், ஜப்பானின் ரிடா சுசுகி, இந்தியாவின் கமலி சிறப்பிடம் பெற்று காலிறுதிக்கு முன்னேறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments