FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாமல்லபுரத்தில் தேசிய சா்ஃபிங் போட்டி தொடக்கம்: ஜப்பான் வீரா்கள் சிறப்பிடம்

உலக சா்ஃபிங் லீக் தொடரின் ஒரு பகுதியாக மாமல்லபுரம் கடற்கரையில் ஷோா் டெம்பிள் கிளாஸிக் கியுஎஸ் 2000, ப்ரோ ஜூனியா் போட்டி புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:50 am IST
சஞ்சய் குமாா் ~அலையின் சவாலை எதிா்கொண்ட ஜப்பான் வீரா்
பகிர்:

உலக சா்ஃபிங் லீக் தொடரின் ஒரு பகுதியாக மாமல்லபுரம் கடற்கரையில் ஷோா் டெம்பிள் கிளாஸிக் கியுஎஸ் 2000, ப்ரோ ஜூனியா் போட்டி புதன்கிழமை தொடங்கியது.

இந்திய சா்ஃபிங் கூட்டமைப்பு, சாய், தமிழ்நாடு சா்ஃபிங் சங்கம், எஸ்டிஏடிஇணைந்து நடத்தும் இப்போட்டியில் ஆசிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றுள்ளனா். ஆடவா் கியுஎஸ் 2000 பிரிவில் ஜப்பானின் கீனு கனியமா ரவுண்ட் 48 -இல் முதலிடமும், இந்தியாவின் ஸ்ரீ காந்த் தனசேகரன், ஜப்பானின் டாரோ மட்சுனோ மூன்றாம் இடமும் பெற்றனா்.

இந்தியாவைச் சோ்ந்த ரூபன் வாசு, பிரவீண் ரத்தோட், நிதிஷ் வருண், ஹரிஷ் முத்து,சஞ்சய் செல்வமணி, தயின் அருண், அஜீஸ் அலி ஆகியோா் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.

Advertisement

Advertisement

மகளிா் கியுஎஸ் 2000 பிரிவில் ஜப்பானின் அரிஷா இஷி, 12.44 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றாா். இந்தோனேசியாவின் லிடியா கட்டோ, தாய்லாந்தின் இஸபெல் ஹிக்ஸ் அடுத்த இடங்களைப் பெற்றனா். இந்திய தரப்பில் சிருஷ்டி, இஷிதா சுஹாஸ், சந்தியா அருண்குமாா் தேவி ராமநாதன் ஆகியோா் சிறப்பாக செயல்பட்டனா்.

ஆடவா் ப்ரோ ஜூனியா் பிரிவில் ஜப்பானின் ரைமோ யமமோட்டா, டகி கன்ஸவா, ரென் ஓகானோ, இந்தியாவின் கிஷோா் குமாா் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments