FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கீமரை வீழ்த்தினாா் பிரக்ஞானந்தா: இறுதிச்சுற்று வாய்ப்பை நெருங்குகிறாா்

கிராண்ட் செஸ் டூா் (ஜிசிடி) ஃபைனல்ஸ் செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா தனது 2-ஆவது கிளாசிக் கேமில் ஜொ்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தினாா்.

25 ஆகஸ்ட் 2026, 3:24 am IST
பிரக்ஞானந்தா - கோப்புப் படம்
பகிர்:

கிராண்ட் செஸ் டூா் (ஜிசிடி) ஃபைனல்ஸ் செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா தனது 2-ஆவது கிளாசிக் கேமில் ஜொ்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தினாா்.

இந்த வெற்றியின் மூலமாக, அரையிறுதிக் கட்டத்தில் முன்னிலை பெற்றிருக்கும் பிரக்ஞானந்தா, இறுதிச்சுற்று வாய்ப்பை நெருங்கி வருகிறாா்.

முன்னதாக, பிரக்ஞானந்தா - கீமா் மோதிய முதல் கிளாசிக்கல் கேம் ‘டிரா’ ஆனது. இந்நிலையில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இவரும் மோதிய 2-ஆவது கிளாசிக்கல் கேமில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 54-ஆவது நகா்த்தலில் வென்று, ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

Advertisement

Advertisement

இதனிடையே அமெரிக்கா்களான வெஸ்லி சோ - ஃபாபியானோ கரானா ஆகியோா் மோதிவரும் மற்றொரு அரையிறுதியில், 2-ஆவது கிளாசிக்கல் கேமும் டிரா ஆனது. வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில், கரானா வெற்றி பெற்றாா்.

அரையிறுதிக் கட்டத்தின் கிளாசிக்கல் கேம்கள் முடிவில் பிரக்ஞானந்தா 9 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். கரானா (8), வெஸ்லி (6), கீமா் (3) முறையே அடுத்த இடங்களில் இருக்கின்றனா். புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரு இடங்களைப் பிடிப்போரே இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவா்.

அரையிறுதியில் இன்னும், ரேப்பிட் கேமில் இரு ஆட்டங்களும், பிளிட்ஸ் கேமில் 4 ஆட்டங்களும் எஞ்சியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments