இந்திய தரவரிசையில் முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா..! கிராண்ட் செஸ் டூர் இறுதிக்கும் தகுதி!
இந்திய அளவில் செஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா குறித்து...
இந்திய அளவில் செஸ் தரவரிசையில் தமிழக வீரர் ஆர். பிரக்ஞானந்தா நான்கு இடங்கள் முன்னேற்றம் கண்டு முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியர் - லகிராவை வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலமாக இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். உலக அளவில் 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அத்துடன் இந்த வெற்றியின் மூலமாக கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கும் தேர்வாகி அசத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
மொத்தம் 9 சுற்றுகள் அடங்கிய இந்த சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடரில் வெஸ்லி ஸோ உடன் பிரக்ஞானந்தா முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். கடைசி சுற்றில் வென்றால் கோப்பை உறுதியாகும்.
செஸ் கிளாசிக்கல் போட்டியின் தரவரிசை (இந்திய அளவில்)
1. பிரக்ஞானந்தா - 2759.5 புள்ளிகள்
2. அர்ஜுன் எரிகைசி - 2759 புள்ளிகள்
3. விஸ்வநாதன் ஆனந்த் - 2739 புள்ளிகள்
4. நிஹல் சரின் - 2718 புள்ளிகள்
5. டி. குகேஷ் - 2703 புள்ளிகள்
Praggnanandhaa New no.1 in India and he has officially secured his spot in the 2026 Grand Chess Tour Finals
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.