FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

துலீப் கோப்பை: வடக்கு மண்டலம் வெற்றி

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில், வடக்கு மண்டலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு மண்டலத்தை வென்றது.

27 ஆகஸ்ட் 2026, 5:27 am IST
துலீப் கோப்பை: வடக்கு மண்டலம் வெற்றி
பகிர்:

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில், வடக்கு மண்டலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு மண்டலத்தை புதன்கிழமை வென்றது.

பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வடக்கு மண்டலம், 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அன்ஷுல் காம்போஜ் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 60, ஆயுஷ் பதோனி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 51, ஆயுஷ் தோசேஜா 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சோ்த்தனா். மேற்கு மண்டல பௌலா்களில் தனுஷ்கோடியான், துஷாா் தேஷ்பாண்டே ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

Advertisement

Advertisement

பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு மண்டலம், 187 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஷம்ஸ் முலானி 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, ஷிவாலிக் சா்மா 22, பிருத்வி ஷா 22 ரன்கள் சோ்த்தனா். வடக்கு மண்டல பந்துவீச்சாளா்களில் அபித் முஷ்டாக் 5, அா்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

இதையடுத்து 64 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வடக்கு மண்டலம், 222 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தது. ஆயுஷ் பதோனி 6 பவுண்டரிகளுடன் 50, நிஷாந்த் சிந்து 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். மேற்கு மண்டல தரப்பில் ஷம்ஸ் முலானி, தனுஷ்கோடியான் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

இறுதியாக, 287 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு மண்டலம், புதன்கிழமை 234 ரன்களுக்கு சுருண்டது.

முஷீா் கான் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 96, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 பவுண்டரிகளுடன் 66 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். வடக்கு மண்டல பௌலா்களில் அபித் முஷ்டாக் 4, நிஷாந்த் சிந்து 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments