FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிராண்ட் செஸ் டூர்: பட்டம் வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தா

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றது குறித்து...

34 வினாடிகள் முன்பு
பிரக்ஞானந்தா - கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா பெற்றார்.

உலகளவில் மிகவும் உயரிய செஸ் தொடர்களில் ஒன்றான கிராண்ட் செஸ் தொடரில் டாப் 10 கிராண்ட் மாஸ்டர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இந்தத் தொடரின் இறுதிப்போட்டி, அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும் பங்கேற்றிருந்தார்.

இறுதிப் போட்டியின் முதல் 2 கிளாசிக்கல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் கரானாவைவிட 9 - 3 என்ற புள்ளிகள் கணக்கில் பிரக்ஞானந்தா பின்தங்கியிருந்தார்.

Advertisement

Advertisement

இருப்பினும், ராபிட் சுற்று ஆட்டங்களில் அமெரிக்க வீரர் கரானாவை எதிர்த்து, சிறப்பாக விளையாடி பிரக்ஞானந்தா முன்னிலை பெற்றார். இதனைத் தொடர்ந்து, பிளிட்ஸ் ஆட்டங்களை பிரக்ஞானந்தா டிரா செய்ததால், புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இறுதியாக, 15 - 13 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார்.

மேலும், சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகையாக சுமார் ரூ.1.90 கோடி வழங்கப்பட்டது.

summary

R Praggnanandhaa creates history becomes the first Indian player to win the Grand Chess Tour

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments