ஓயார்ஜபால் 2 கோல்கள்: 2010க்குப் பிறகு முதல் நாக் அவுட் வெற்றியைப் பெற்ற ஸ்பெயின்!
கால்பந்து உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று போட்டியில் வென்ற ஸ்பெயின் அணி குறித்து...
ஆஸ்திரியாவுக்கு எதிரான கால்பந்து உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று போட்டியில் ஸ்பெயின் அணி 3-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணியின் ஃபார்வேடு வீரர் மிகைல் ஓயார்ஜபால் 2 கோல்கள் அடித்து அசத்தினார். உலகக் கோப்பையை வென்ற 2010க்குப் பிறகு ஸ்பெயின் தனது முதல் நாக் அவுட் வெற்றியை ருசித்துள்ளது.
ஸ்பெயின் அணி கடைசியாக 2010ல் உலகக் கோப்பையை வென்றது. தற்போது, முதல்முறையாக நாக் அவுட் சுற்றில் வென்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ஓயார்ஜபால் 36, 89 ஆகிய நிமிஷங்களில் கோல் அடித்தார். பெட்ரோ போரோ 66ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இறுதியில் 3-0 என ஸ்பெயின் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 59 சதவிகித பந்தை தன்வசம் வைத்திருந்தது. 23 ஷாட்டுகளில் 10 முறை இலக்கை நோக்கி அடித்திருந்தது.
போர்ச்சுகல் அணி குரோஷியாவை 2-1 என வென்றதால், ஸ்பெயினுடன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதவிருக்கிறது. இரு அணிகளும் கடைசியாக நேஷன்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதியிருந்தது.
Mikel Oyarzabal's 2 goals send dominant Spain past Austria 3-0, into round of 16 at World Cup
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.