திருப்புமுனையாக அமைந்த முதல் கோல்: ஜூலியன் அல்வாரெஸ் ஆட்ட நாயகன்!
நடப்பு உலகக் கோப்பையில் முதல் கோல் அடித்து, ஆட்ட நாயகன் விருதையும் வென்ற ஜூலியன் அல்வாரெஸ் குறித்து...
நடப்பு உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீன அணியின் நட்சத்திர வீரர் ஜூலியன் அல்வாரெஸ் தனது முதல் கோல் அடித்து, ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
கால்பந்து உலகக் கோப்பை காலிறுதியில் ஆர்ஜென்டீனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் 90 நிமிஷ ரெகுலர் மற்றும் ஸ்டாப்பேஜ் நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் முடித்தன. பின்னர், ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.
Advertisement
Advertisement
ஜூலியன் அல்வாரெஸ் 112ஆவது நிமிஷத்தில் இடது பக்கத்தில் இருந்து தனது வலது காலால் சிறப்பான கோல் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் இது அவரது முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிறப்பான ஆட்டத்தையே மாற்றிய கோல் அடித்த அல்வாரெஸுக்கு ஆட்ட நாயகன் விருது தரப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை முழுவதும் சுமாராக விளையாடிய அல்வாரெஸ் ஒரே கோல் மூலம் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.
அத்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடும் அல்வாரெஸ் பார்சிலோனா அணியில் விளையாட விரும்புகிறார். இவரை பல அணிகள் வாங்க முயற்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
First goal of the 2026 World Cup: Julian Alvarez wins the Player of the Match award!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.