FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தடுப்பாட்டம்: முதலிடத்தில் நீடிக்கும் பேலந்தோர் விருது வென்ற ரோட்ரி!

கால்பந்து உலகக் கோப்பை 2026 தடுப்பாட்ட திறனில் முதலிடம் பிடித்துள்ள ஸ்பெயின் வீரர் குறித்து...

Updated On : 14 ஜூலை 2026, 6:52 pm IST
பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை இடைமறித்து, அப்புறப்படுத்தும் ரோட்ரி. - AFP
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பை 2026 தடுப்பாட்ட திறனில் ஸ்பெயின் அணியின் டிஃபென்ஸிவ் மிட்ஃபீல்டரும் பேலந்தோர் விருது வென்றவருமான ரோட்ரி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்தப் பட்டியலில் நான்கு ஸ்பெயின் வீரர்கள் டாப் 10 பட்டியலுக்குள் இருக்கிறார்கள். இதுவரை நடந்த 2026 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஸ்பெயின் அணி ஒரேயொரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பையில் புதியதாக சில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து 0-10 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

ஒரு போட்டியில் அட்டாக்கிங் (கோல் அடிக்க முயலுதல்), கிரியேட்டிவிட்டி (படைப்பாற்றல் திறனுடன் விளையாடுதல்), டிஃபென்ஸ் (கோல்களை தடுத்தல்) ஆகிய பிரிவுகளில் இந்தப் பட்டியல் ஓவ்வொரு போட்டிக்கும் தயார் செய்யப்படுகின்றன. அதன் ஓட்டுமொத்த பட்டியலும் தனியாக நிர்வகிக்கப்படுகிறது.

அதன்படி தடுப்பாட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரோட்ரி முதலிடம் பிடிக்க, பெட்ரோ போரோ இரண்டாமிடம் பிடித்துள்ளார். பிரான்ஸ் வீரர்கள் இருவர் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள். இன்றிரவு இந்த இரண்டு அணிகள் அரையிறுதியில் மோதவிருக்கின்றன.

டாப் 10 டிஃபென்ஸிவ் வீரர்கள்

1. ரோட்ரி - 7.90 புள்ளிகள் (ஸ்பெயின்)

2. பெட்ரோ போரோ - 7.64 புள்ளிகள் (ஸ்பெயின்)

3. லூக் டி ஃபூஜெரோல்ஸ் - 7.43 புள்ளிகள் (கனடா)

4. ஐமெரிக் லபோர்ட் - 7.42 புள்ளிகள் (ஸ்பெயின்)

5. டாயோட் உபமெகானோ - 7.40 புள்ளிகள் (பிரான்ஸ்)

6. லூகாஸ் டிக்னே - 7.29 புள்ளிகள் (பிரான்ஸ்)

7. டேவின்சன் சஞ்செஜ் - 7. 28 புள்ளிகள் (கொலம்பியா)

8. கிறிஸ் ரிச்சார்ட்ஸ் - 7.12 புள்ளிகள் (அமெரிக்கா)

9. பா குபார்ஸி - 7.05 புள்ளிகள் (ஸ்பெயின்)

10. நௌசைர் மஸ்ரௌய் - 7.05 புள்ளிகள் (மொராக்கோ)

summary

Spanish Midfielder Rodri takes first place in Defensive Top Performers Ranking

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments