FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிறந்த படைப்பாற்றல் திறன்: முதலிடத்தில் மைக்கேல் ஒலிஸே!

கால்பந்து உலகக் கோப்பை 2026ல் சிறந்த படைப்பாற்றல் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள பிரான்ஸ் வீரர் குறித்து...

கடினமான சூழ்நிலையில் பந்தை பாஸ் செய்யும் மைக்கேல் ஒலிஸே. - AFP
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பை 2026ல் சிறந்த படைப்பாற்றல் திறன் கொண்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பிரான்ஸ் மிட்ஃபீல்டர் மைக்கேல் ஒலிஸே (24 வயது) முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்தப் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி, கிளியன் எம்பாபே, லாமின் யமால் ஆகியோர் இடம்பெற்றிருந்தும் மைக்கேல் ஒலிஸே முதலிடம் பிடித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக அசிஸ்ட்டுகளை செய்தவர்கள் பட்டியலில் பிரான்ஸ் மிட்ஃபீல்டர் மைக்கேல் ஒலிஸே முதலிடத்தில் இருக்கிறார். இதன் மூலம் பல ஜாம்பவான்களை அவர் சமன்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்த உலகக் கோப்பையில் புதியதாக சில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து 0-10 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

ஒரு போட்டியில் அட்டாக்கிங் (கோல் அடிக்க முயலுதல்), கிரியேட்டிவிட்டி (படைப்பாற்றல் திறனுடன் விளையாடுதல்), டிஃபென்ஸ் (கோல்களை தடுத்தல்) ஆகிய பிரிவுகளில் இந்தப் பட்டியல் ஓவ்வொரு போட்டிக்கும் தயார் செய்யப்படுகின்றன. அதன் ஓட்டுமொத்த பட்டியலும் தனியாக நிர்வகிக்கப்படுகிறது.

அதன்படி உருவாகியுள்ள கிரியேட்டிவிட்டி (படைப்பாற்றல் திறனுடன் விளையாடுதல்) பிரிவில் பிரான்ஸ் மிட்ஃபீல்டர் மைக்கேல் ஒலிஸே முதலிடம் பிடித்துள்ளார்.

டாப் 10 கிரியேட்டிவிட்டி வீரர்கள்

1. மைக்கேல் ஒலிஸே - 8.30 புள்ளிகள் (பிரான்ஸ்)

2. ஆண்டனி கார்டன் - 7.81 புள்ளிகள் (இங்கிலாந்து)

3. ஜெரிமி டோக்கு - 7.75 புள்ளிகள் (பெல்ஜியம்)

4. கிளியன் எம்பாபே - 7.65 புள்ளிகள் (பிரான்ஸ்)

5. லாமின் யமால் - 7.48 புள்ளிகள் (ஸ்பெயின்)

6. லியோனல் மெஸ்ஸி - 7.41 புள்ளிகள் (ஆர்ஜென்டீனா)

7. ராபர்ட்டோ அல்வராடோ - 7.29 புள்ளிகள் (மெக்சிகோ)

8. புகாயோ சாகா - 7.24 புள்ளிகள் (இங்கிலாந்து)

9. மார்கஸ் ராஷ்போர்டு - 7.13 புள்ளிகள் (இங்கிலாந்து)

10. ஓஸ்மானே டெம்பெலே - 7.03 புள்ளிகள் (பிரான்ஸ்)

summary

Top Performers Ranking Michael OLISE becomes first player in Creativity Rankings list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments