FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஸ்பெயின் பின்தொடரும் கால்பந்தின் தத்துவம்... இறுதிப் போட்டி பற்றி மெஸ்ஸி கூறியதென்ன?

ஆர்ஜென்டீன கேப்டன் லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து பேசியிருப்பதாவது...

Updated On : 16 ஜூலை 2026, 6:13 pm IST
பயிற்சியின்போது லியோனல் மெஸ்ஸி. - படம்: ஏபி
பகிர்:

ஆர்ஜென்டீன கேப்டன் லியோனல் மெஸ்ஸி கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து, “ஸ்பெயின் அணியினர் பின்தொடரும் கால்பந்தின் தத்துவம் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும்” எனக் கூறியுள்ளார்.

நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா அரையிறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று, இறுதிப் போட்டிக்கு இன்று அதிகாலை முன்னேறியது.

இறுதிப் போட்டியில் ஸ்பெயின் உடன் இந்திய நேரப்படி ஜூலை 20 அதிகாலை 12.30 மணிக்கு போட்டி தொடங்கவிருக்கிறது. இந்தப் போட்டி குறித்து அரையிறுதியில் ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு மெஸ்ஸி கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

தனித்துவமான பாணியில் விளையாடும் அற்புதமான வீரர்கள் இருக்கும் ஸ்பெயின், மிகவும் சிறந்த அணி. எனக்கு அந்த அணியை குறித்தும் அந்த அணியினர் பின்தொடரும் கால்பந்தின் தத்துவம் குறித்தும் நன்றாகவே தெரியும். அந்த அணியின் வீரர்கள் குறித்தும் தெரியும்.

ஸ்பெயின் அணியில் பலருடன் விளையாடி இருக்கிறேன். இப்போதும் அவர்களைப் பின்தொடர்கிறேன். அதில் பலர், எனக்குப் பிடித்த பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடுகிறார்கள். இறுதிப் போட்டி என்பதால், இந்தப் போட்டி சிறப்பானதாக இருக்கும். பொதுவாகவே இந்தப் போட்டி சமமான போட்டி நிறைந்ததாக இருக்குமென எதிர்பார்க்கிறேன்.

உலகக் கோப்பைக்காக ஓராண்டாக பயிற்சி செய்து வருகிறேன். ஆர்ஜென்டீனாவில் தங்கி காலை, மதியம் என பயிற்சி செய்து வந்தேன். ஏனெனில், என்னால் முடிந்த அனைத்தையும் அணிக்கு தர வேண்டும். முடிந்த அளவுக்கு எனது முழு உடல்திறனையும் அளிக்க பயிற்சி செய்தேன் என்றார்.

summary

Football philosophy they’ve been following for many years says messi about spain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments