100 வாரங்களாக முதலிடம்... வரலாற்றில் இடம்பிடித்த சபலென்கா!
டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்காவின் புதிய சாதனை குறித்து...
பெலாரஸ் நாட்டின் டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா 100 வாரங்களாக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து வரலாற்றில் இணைந்துள்ளார்.
டென்னிஸ் வரலாற்றில் முன்னதாக, 9 வீராங்கனைகள் இந்தப் பட்டியலில் இருக்க, பத்தாவது வீராங்கனையாக சபலென்கா இணைந்துள்ளார்.
கடைசியாக அரினா சபலென்கா விம்பிள்டனில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நவோமி ஒசாகாவிடம் 2-6, 6-7 என நேர் செட்களில் தோல்வியடைந்தார். இருப்பினும் தரவரிசையில் தனது முதலிடத்தை இழக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
117 வாரங்கள் முதலிடம் பிடித்து பெல்ஜியம் வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் ஒன்பதாவது வீராங்கனையாக இந்தப் பட்டியலில் இருக்கிறார். முதலிடத்தில் ஸ்பெட்ஃபி கிராஃப் 377 வாரங்கள் என்ற அபாரமான சாதனையுடன் இருக்கிறார்.
அடுத்ததாக, கனடா ஓபனில் சபலென்கா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிகள் ஆக.2 முதல் ஆக.10வரை நடைபெற இருக்கின்றன.
அதிக வாரங்கள் முதலிடம் பிடித்த வீராங்கனைகள்
1. ஸ்டெஃபி கிராஃப் - 377 வாரங்கள்
2. மார்டினா நவ்ரதிலோவா – 332 வாரங்கள்
3. செரீனா வில்லியம்ஸ் – 319 வாரங்கள்
4. கிறிஸ் எவர்ட் – 260 வாரங்கள்
5. மார்டினா ஹிங்கிஸ் – 209 வாரங்கள்
6. மோனிகா செலஸ் - 178 வாரங்கள்
7. இகா ஸ்விடெக் – 125 வாரங்கள்
8. ஆஷ் பார்ட்டி - 121 வாரங்கள்
9. ஜஸ்டின் ஹெனின் – 117 வாரங்கள்
10. அரினா சபலெங்கா – 100 வாரங்கள்
Sabalenka became tenth female tennis player in history to spend 100 weeks as world number one
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.