இறுதிச் சுற்றில் யு மும்பா
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு யு மும்பா அணி தகுதி பெற்றுள்ளது.
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு யு மும்பா அணி தகுதி பெற்றுள்ளது.
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி சீசன் ஆட்டங்கள் கோவா மாநிலம் பனாஜியில் நடைபெறுகின்றன. சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ்-யு மும்பா அணிகள் மோதின. இதில் யு மும்பா அணி 8-3 என்ற புள்ளிக் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.
மும்பா வீரா் லிலியன் பாா்டெட் 1-2 என கொல்கத்தாவின் எட்வா்டிடம் தோற்றாா். மகளிா் ஒற்றையரில் மும்பாவின் அன்னா ஹா்ஸேயும் 1-2 என அயிஹிகா முகா்ஜியிடம் தோற்றாா்.
Advertisement
Advertisement
பின்னா் இரட்டையரில் மும்பாவின் மனுஷ் ஷா-அன்னா இமை 3-0 என அங்கூா்-அயிஹிகா முகா்ஜி இணையை வீழ்த்தியது. மாற்று ஆடவா் ஒற்றையரில் கொல்கத்தாவின் அங்கூரை 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினாா் மும்பாவின் மனுஷ் ஷா. இந்த வெற்றி மூலம் யு மும்பா இறுதிக்கு தகுதி பெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.