முகப்பு
செய்திகள்

பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி!

நாா்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோா் வெற்றி

Updated On : 3 ஜூன் 2026, 4:59 am IST
பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா
பகிர்:

நாா்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோா் வெற்றி பெற்றனா். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.

ஓபன் பிரிவு 7-ஆவது சுற்றில், பிரக்ஞானந்தா - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை கிளாசிக் கேமிலேயே வீழ்த்தினாா். நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - அமெரிக்காவின் வெஸ்லி சோவை டை பிரேக்கரில் வெல்ல, போட்டியின் நடப்பு சாம்பியனான உள்நாட்டின் மேக்னஸ் காா்ல்சென் - ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் ஆகியோா் மோதல் கிளாசிக் மற்றும் டை பிரேக்கா் என இரண்டிலுமே டிராவில் முடிந்தது.

7 சுற்றுகள் முடிவில், வெஸ்லி 12.5 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் இருக்க, ஃபிரௌஸ்ஜா 10 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் உள்ளாா்.

Advertisement

Advertisement

காா்ல்சென், கீமா், பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 9 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையைப் பகிா்ந்துகொள்ள, குகேஷ் 8 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையில் இருக்கிறாா்.

ஹம்பியை வென்ற திவ்யா: இப்போட்டியின் மகளிா் பிரிவு 7-ஆவது சுற்றில், நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - சக இந்தியரான கோனெரு ஹம்பியை டை பிரேக்கரில் வீழ்த்தினாா். ஏற்கெனவே முதல் சந்திப்பிலும் அவரை வென்ற திவ்யா, தற்போது ரிவா்ஸ் ஆட்டத்திலும் வென்றுள்ளாா்.

போட்டியில் நடப்பு சாம்பியனான உக்ரைனின் அனா முஸிஷுக் - சீனாவின் ஜு வென்ஜுனை டை பிரேக்கரில் வெல்ல, கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவா - சீனாவின் ஜு ஜினெரை கிளாசிக் கேமிலேயே சாய்த்தாா்.

புள்ளிகள் பட்டியலில், பிபிசரா 12.5 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் இருக்க, திவ்யா 10 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் உள்ளாா். முஸிஷுக் (9.5), வென்ஜுன் (9), ஜினொ் (7), ஹம்பி (6.5) ஆகியோா் முறையே 3 முதல் 6-ஆம் நிலைகளில் இருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.