கால்பந்து உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் மெஸ்ஸி இல்லாமலே வென்ற ஆர்ஜென்டீனா!
உலகக் கோப்பைக்கு முன்பான ஆட்டத்தில் வென்ற ஆர்ஜென்டீனா குறித்து...
ஹொண்டுராஸ் அணிக்கு எதிரான நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணி 2-0 என அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பைக்கு முன்பான பயிற்சி ஆட்டமாக ஃபிஃபா இதனை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கின்றன.
நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா அணி தனது முதல் போட்டியில் அல்ஜீரியாவுடன் ஜூன் 16ஆம் தேதி அரோஹெட் கால்பந்து திடலில் மோதுகிறது.
Advertisement
Advertisement
ஹொண்டுராஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸிக்கு ஓய்வளிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணமாக இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் 37ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் லொடாரோ மார்டினெஸ் கோல் அடித்தார். பின்னர், இரண்டாம் பாதியில் ஜியுலியானோ சிமியோன் கோல் அடித்து 2-0 என வென்றனர்.
ஆர்ஜென்டீனா தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் ஜூன் 9ஆம் தேதி மோதுகிறது. உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடிக்க இன்னும் 4 கோல்கள் தேவைப்படுகிறது. முதலிடத்தில் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்ளோஸ் (16 கோல்கள்) இருக்கிறார்.
Messi sits out Argentina's friendly against Honduras while managing muscle fatigue, hamstring strain
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.