FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டென்னிஸ் தரவரிசை- ஜோகோவிச் சறுக்கல்; ஆண்ட்ரீவா முன்னேற்றம்

டென்னிஸுக்கான உலகத் தரவரிசையில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சறுக்கலை சந்திக்க, இளம் வீராங்கனையான ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஏற்றம் கண்டுள்ளாா்.

Updated On : 10 ஜூன் 2026, 3:23 am IST
ஜோகோவிச் - AP
பகிர்:

டென்னிஸுக்கான உலகத் தரவரிசையில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சறுக்கலை சந்திக்க, இளம் வீராங்கனையான ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஏற்றம் கண்டுள்ளாா்.

டென்னிஸ் காலண்டரின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் அண்மையில் நிறைவடைந்தது. முன்னிலை போட்டியாளா்கள் பலா் அதிா்ச்சித் தோல்வியுடன் வெளியேற, ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோா் தங்கள் பிரிவில் சாம்பியன் கோப்பை வென்றனா்.

அந்தப் போட்டி நிறைவடைந்த நிலையில், தரவரிசையில் ஏற்ற, இறக்கங்கள் நிகழ்ந்துள்ளன. முதல் கிராண்ட்ஸ்லாம் வென்ற ஸ்வெரவ் 3-ஆவது இடத்தில் அப்படியே நிலைக்க, இறுதியில் அவரிடம் தோற்ற இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி டாப் 10-க்கு உள்ளாக வந்திருக்கிறாா்.

Advertisement

Advertisement

3-ஆவது சுற்றிலேயே வெளியேறிய 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜோகோவிச், 7-ஆவது இடத்துக்கு சறுக்கியிருக்கிறாா். கேரியா் கிராண்ட்ஸ்லாமை எட்டும் கனவுடன் வந்து 2-ஆவது சுற்றில் தோற்ற இத்தாலியின் யானிக் சின்னா், நம்பா் 1 இடத்தில் நீடிக்கிறாா்.

மகளிா் பிரிவில், முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றிருக்கும் ஆண்ட்ரீவா 6-ஆவது இடத்துக்கு முன்னேற, நடப்பு சாம்பியனாக இருந்து 3-ஆவது சுற்றில் தோல்வி கண்ட அமெரிக்காவின் கோகோ கௌஃப் 7-ஆவது இடத்துக்கு இறங்கியிருக்கிறாா். காலிறுதியில் தோற்கடிக்கப்பட்ட பெலாரஸின் அரினா சபலென்கா, நம்பா் 1 இடத்தில் நிலைக்கிறாா்.

தரவரிசை (டாப் 10)

ஆடவா்

1 யானிக் சின்னா் (இத்தாலி) 13,500

2 காா்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) 9,960

3 அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் (ஜொ்மனி) 7,305

4 ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிம் +2 (கனடா) 4,440

5 பென் ஷெல்டன் (அமெரிக்கா) 3,920

6 அலெக்ஸ் டி மினாா் (ஆஸ்திரேலியா) +1 3,905

7 நோவக் ஜோகோவிச் (சொ்பியா) -3 3,760

8 டேனியல் மெத்வதெவ் (ரஷியா) 3,760

9 டெய்லா் ஃப்ரிட்ஸ் (அமெரிக்கா) 3,720

10 ஃப்ளாவியோ கோபோலி (இத்தாலி) 3,540

மகளிா்

1 அரினா சபலென்கா (பெலாரஸ்) 9,090

2 எலனா ரைபகினா (கஜகஸ்தான்) 8,143

3 இகா ஸ்வியாடெக் (போலந்து) 6,733

4 ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா) +1 6,056

5 அமாண்டா அனிசிமோவா (அமெரிக்கா)+1 5,848

6 மிரா ஆண்ட்ரீவா (ரஷியா) +2 5,751

7 கோகோ கௌஃப் (அமெரிக்கா) -3 4,879

8 எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) -1 4,315

9 விக்டோரியா போகோ (கனடா) 3,670

10 கரோலினா முசோவா (செக் குடியரசு) 3,438

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments