96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து வரலாறு படைத்தது மெக்சிகோ!
கால்பந்து உலகக் கோப்பையில் மெக்சிகோ அணி நிகழ்த்திய சாதனை குறித்து...
கால்பந்து உலகக் கோப்பையில் மெக்சிகோ அணி 96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து தான் விளையாடிய முதல் போட்டியிலேயே முதல்முறையாக வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.
நடப்பு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் மெக்சிகோவில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை 2-0 என வீழ்த்தியது.
இந்தப் போட்டியின் இறுதிக் கட்டத்தில் இரு அணி வீரர்களுக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டது. இரண்டாம் பாதியில் தெ.ஆ. வீரர் சிதோலேவுக்கு 50ஆவது நிமிஷத்திலும் தெம்பா ஜ்வானேவுக்கு 84ஆவது நிமிஷத்திலும் ரெட் கார்டு வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
மெக்சிகோ வீரர் சீசர் மோன்டெஸ் 90+2ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது.
மெக்சிகோ அணி 1930 முதல் விளையாடி வருகிறது. இதுவரை 16 உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறது. 1974, 1982 ஆம் ஆண்டுகளில் தேர்வாகாத மெக்சிகோ அணி 1990ல் பங்கேற்க தடை செய்யப்பட்டது.
1930ல் பிரான்ஸ் அணி மெக்சிகோவை 4-1 என வீழ்த்தியது. அதுமுதல் தனது முதல் உலகக் கோப்பையில் மெக்சிகோ அணி வென்றதே கிடையாது. இந்த அணி இரண்டு முறை (1970, 1986) காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், தனது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இதுநாள் வரைக்கும் இருந்த முதல் போட்டியில் தோல்வி என்ற சாபத்தை முறியடித்துள்ளது.
FIFA World Cup 2026: Mexico wins opening game for the first time and curse broken
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.