உலகக் கோப்பையின் முதல் போட்டி: வெற்றியுடன் தொடங்கியது மெக்சிகோ!
கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியில் வென்ற மெக்சிகோ அணி குறித்து...
கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியில் மெக்சிகோ அணி 2-0 என அசத்தல் வெற்றி பெற்றது.
மிகவும் கோலகலமாகத் தொடங்கிய உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தனது சொந்த மண்ணில் விளையாடிய மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.
தொடக்கதிலேயே அழுத்தத்தை ஏற்படுத்திய மெக்சிகோ அணி 9ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தியது. முதல் பாதியில் 1-0 என முன்னிலை வகித்தது.
Advertisement
Advertisement
இரண்டாம் பாதியில் மெக்சிகோ அணியின் ஜிமினேஸ் 67-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இறுதிவரைக்கும் போராடிய தென்னாபிரிக்க அணி ஒரு கோல்கூட அடிக்க மெக்சிகோ அணி இடம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் 61 சதவிகிதம் பந்தை மெக்சிகோ அணியினர் தனது வசம் வைத்திருந்தார்கள். பந்தை கடத்தும் திறனில் மெக்சிகோ அணியினர் 91 சதவிகித துல்லியமாக இருந்ததும் வியக்கவைத்தது.
முதல் கோல் அடித்த மெக்சிகோவின் ஜூலியன் குவினோன்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Mexico gets off to roaring World Cup start with 2-0 win over South Africa in opening match
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.