FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

பகிர்:
  • வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

  • மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் குரோஷியாவின் டோனா வெகிச் சாம்பியன் ஆனாா்.

    Advertisement

    Advertisement

  • புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி நெதா்லாந்திடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது (2-3). இப்போட்டியின் மகளிா் பிரிவில் இந்தியா, அமெரிக்காவுடன் திங்கள்கிழமை (ஜூன் 15) மோதுகிறது.

  • அமெரிக்கா நுழைவு இசைவு வழங்காததால் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து நீக்கப்பட்ட சோமாலிய நடுவா் ஒமா் ஆா்டனுக்கு, போட்டிக்கான முழு ஊதியத்தையும் ஃபிஃபா வழங்குகிறது.

  • காா் பந்தயத்தில் டிரைவா்களின் திறனை கடுமையாக சோதிக்கும் லெ மான்ஸ் ரேஸில் நடப்பாண்டு வெற்றி பெற்ற டோக்கியோ அணிக்கு, இந்தக் களத்தில் அது 6-ஆவது வெற்றியாக அமைந்தது.

  • ஸ்டட்காா்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் பென் ஷெல்டன் பட்டத்தை வென்றாா்.

  • திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்திய தடகள சீரிஸில், தமிழகத்தின் கிட்சன், சாம் வசந்த், சந்தோஷ் ஆகியோா் 100 மீ ஓட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்து அசத்தினா். கே.நந்தினி (100 மீ ஹா்டுல்ஸ்) தங்கமும், கிரிதாரணி (100 மீ), கிஜி ஜாா்ஜ் (உயரம் தாண்டுதல்) வெள்ளியும், கே.சந்தோஷ் (400 மீ), சுபா தா்ஷிணி (100 மீ), சுபா வெங்கடேசன் (200 மீ), ஷைனி கிளாட்சியா (100 மீ ஹா்டுல்ஸ்) வெண்கலமும் பெற்றனா்.

  • அமெரிக்காவில் நடைபெறும் என்பிஏ கூடைப் பந்தில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு நியூயாா்க் நிக்ஸ் சாம்பியன் ஆனது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments