முகப்பு
செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பையில் வரலாற்று வெற்றியாக மாறியாக கனடாவின் முதல் வெற்றி!

கால்பந்து உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த கனடா குறித்து...

Updated On : 19 ஜூன் 2026, 5:55 pm IST
ஹாட்ரிக் கோல் அடித்த கனடாவின் ஜோனதன் தாவீது.
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பையில் கனடாவின் முதல் வெற்றி ஒரு வரலாற்று வெற்றியாக மாறியிருக்கிறது. கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் 6-0 என மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

கனடாவில் அமைந்துள்ள பிசி பிளேஸ் வான்கூவர் திடலில் கனடாவும் கத்தாரும் மோதின. இந்தப் போட்டியில் கத்தார் அணியினர் இருவருக்கு 33, 51ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் கனடாவின் ஜோனதன் தாவீது ஹாட்ரிட் கோல் (29’, 45+3’, 90+2’) அடித்து அசத்தினார். மற்ற கனடா வீரர்கள் லரின் (16’), சலிபா (64’) கோல் அடித்தார்கள். மனாய் (75’) ஓன் கோல் அடித்து சொதப்பினார்.

Advertisement

Advertisement

கனடாவின் பிரதமர் மார்க் கார்னே இந்தப் போட்டியைப் பார்க்க வந்திருந்தார். ஜி7 மாநாட்டினால் முதல் போட்டியைப் பார்க்க தவறியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பையில் கனடா அணி தனது முதல் போட்டியில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா உடன் 1-1 என சமனில் முடித்தது.

முன்னதாக 1986, 2022 கால்பந்து உலகக் கோப்பைகளில் பங்கேற்ற கனடா அணி ஒரேயொரு வெற்றியைக் கூட பெறாமல் இருந்தது. இந்த நிலையில், முதல் வெற்றியிலேயே 6-0 என மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.

summary

Jonathan David's hat trick propels Canada to its first World Cup win, 6-0 over Qatar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments