FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்ட்!

அமெரிக்காவின் மியாமி நகரில் உருகுவே - கேப் வெர்ட் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்ட் - AP
பகிர்:

அமெரிக்காவின் மியாமி நகரில் உருகுவே - கேப் வெர்ட் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது. இரு முறை சாம்பியனான உருகுவேக்கு, முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் கேப் வெர்ட் கடும் சவால் அளித்தது.

இந்த ஆட்டத்தில் கேப் வெர்ட் வீரர் கெவின் பினா 21-ஆவது நிமிஷத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பில் தனது அணிக்காக கோல் அடித்து, உருகுவேயை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். சுதாரித்துக் கொண்ட உருகுவே தரப்பில், மேக்ஸி அராஜோ 44-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

தொடர்ந்து அந்த அணியின் அகஸ்டின் கேனோபியோ (45+6') கோல் அடிக்க, முதல் பாதியை 2-1 முன்னிலையுடன் உருகுவே நிறைவு செய்தது. ஆனால் விட்டுக் கொடுக்காத கேப் வெர்ட், 2-ஆவது பாதியில் 61-ஆவது நிமிஷத்தில் ஹேலியோ வரெலா அடித்த கோல் மூலமாக, ஆட்டத்தை 2-2 என சமநிலைக்குக் கொண்டு வந்தது.

Advertisement

Advertisement

நெருக்கடிக்கு உள்ளான உருகுவே மீண்டும் முன்னிலை பெறுவதற்காகக் கடினமாக முயற்சிக்க, கேப் வெர்ட் அதற்கு வாய்ப்பே அளிக்கவில்லை. முடிவில் ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் மிகச் சிறிய அணியான கேப் வெர்ட், முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் கோல் இன்றி டிரா செய்து அந்த அணிக்கு சவால் அளித்த நிலையில், இந்த ஆட்டத்தில் 2 கோல்களும் அடித்து உருகுவேக்கு கடும் போட்டியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments