7/16: உலகக் கோப்பையில் இருந்து கத்தார், செக் குடியரசு வெளியேற்றம்!
கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய 7 அணிகள் குறித்து...
மெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் 0 - 3 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றதால், கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து செக் குடியரசு அணி வெளியேறியிருக்கிறது.
கால்பந்து உலகக் கோப்பை ஜூன் 11 முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுவரும் இதில் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற, 16 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறுமென ஃபிஃபா விதிமுறைகள் தெரிவிக்கின்றன.
இன்று சியாட்டல் திடலில் நடைபெற்ற போட்டியில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணி கத்தாரை 3-1 என வீழ்த்தியது. இதனால், கத்தார் அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
Advertisement
Advertisement
அடுத்து, மெக்சிகோ தனது சொந்த மண்ணில் செக் குடியரசு அணியை 0-3 என வீழ்த்தியது. இந்தத் தோல்வியால் செக் குடியரசு உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது.
முன்னதாக, இந்த உலகக் கோப்பையில் இருந்து துருக்கி (குரூப் டி), ஹைதி (குரூப் சி), துனிசியா (குரூப் எஃப்), ஜோர்டான் (குரூப் ஜே), பனாமா (குரூப் எல்) ஆகிய ஐந்து அணிகள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி இருந்தன.
தற்போது, இதில் ஆறாவது, ஏழாவது அணிகளாக கத்தார் (குரூப் பி), செக் குடியரசு (குரூப் ஏ) அணிகள் இன்று இணைந்துள்ளன.
7/16: Qatar and the Czech Republic eliminated from the World Cup!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.