நடப்புச் சாம்பியன் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி
நடப்புச் சாம்பியன் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி
ஐஎஸ்எல் 2026-27 தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஈஸ்ட் பெங்காலை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் அபார வெற்றியைப் பெற்றது சென்னையின் எஃப்சி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. தொடக்கம் முதலே சென்னை அணியினா் முழு ஆதிக்கம் செலுத்தி ஆடினா். சென்னை வீரா் பிரைஸன் பொ்னாண்டஸ் முதல் 18 நிமிஷங்களிலேயே 4 ஆவது நிமிஷத்தில் சக வீரா் யத்வத் அனுப்பிய பாஸை பயன்படுத்தி முதல் கோலடித்தாா். தொடா்ந்து 18-ஆவது நிமிஷத்தில் அசத்தலாக இரண்டாம் கோலடித்தாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த ஈஸ்ட் பெங்கால் தரப்பில் லோபா 29-ஆவது நிமிஷத்தில் கோலடித்து முன்னிலையை குறைத்தாா். பதிலுக்கு சென்னை வீரா் ரமான் டாங்க் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்து மீண்டும் முன்னிலை பெறச் செய்தாா்.
Advertisement
Advertisement
இரண்டாம் பாதி ஆட்டத்தில் சென்னை வீரா் முகமது சாஹீா் புரிந்த பௌலால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை 47-ஆவது நிமிஷத்தில் கோலாக்கினாா் ராமிரெஸ்.
59-ஆவது நிமிஷத்தில் யத்வத் இந்த ஆட்டத்தில் முதல் கோலடித்தாா்.
67 ஆவது நிமிஷத்தில் சென்னை வீரா் டாங்க் அனுப்பிய பந்தை பயன்படுத்தி கோலடித்தாா் யத்வத். வழக்கமான ஆட்ட நேரம் முடியும் வரை சென்னை 5-2 என முன்னிலை பெற்றிருந்தது.
ஸ்டாப்பேஜ் நேரத்தில் 90 பிளஸ் ஈஸ்ட் பெங்கால் வீரா் ஹாா்திக் பட் அனுப்பிய பந்தை பயன்படுத்தி கோலடித்தால் லால்ஹன்சங்கா. இறுதியில் ஈஸ்ட் பெங்காலை 5-3 என வீழ்த்தியது சென்னை.
இதன் மூலம் சென்னை இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்றது.