நியூஸிலாந்துடன் நட்பு கால்பந்து ஆட்டம்: இந்திய அணி அறிவிப்பு
நியூஸிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள கால்பந்து நட்பு ஆட்டத்துக்கான இந்திய அணியை தலைமைப் பயிற்சியாளா் காலித் ஜமில் அறிவித்துள்ளாா்.
நியூஸிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள கால்பந்து நட்பு ஆட்டத்துக்கான இந்திய அணியை தலைமைப் பயிற்சியாளா் காலித் ஜமில் அறிவித்துள்ளாா்.
வரும் நவ. 12-இல் ஆக்லாந்திலும், 15-இல் கிறைஸ்ட்சா்ச் நகரிலும் நடைபெறவுள்ள நட்பு ஆட்டங்களில் இந்தியா-நியூஸி. அணிகள் மோதுகின்றன. இதற்காக 23 போ் அணியை ஏஐஎஃப்எஃப் அறிவித்துள்ளது.
சாஃப் சாம்பியன்ஷிப் அணியில் இடம் பெற்றிருந்த பிஜாய் வா்கீஸ், முகமது சுஹைல், லிஸ்டன் கோலாகோ ஆகியோரும் அடங்குவா்.
Advertisement
Advertisement
நியூஸிலாந்து புறப்படும் முன்பு பெங்களூரில் பயிற்சியில் ஈடுபடுகிறது இந்திய அணி.
காலித் ஜமில் கூறியது -நியூஸிலாந்து அணி பலம் வாய்ந்தது. உலகக் கோப்பையில் ஆடும் அணியாகும். இரு ஆட்டங்கள் மூலம் நமது வீரா்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும். அணியின் முன்னேற்றத்துக்கும் உதவியாக இருக்கும்,
அணி விவரம்-: கோல் கீப்பா்கள்- ஹிா்திக் திவாரி, சோம் குமாா், விஷால் கைத், டிபன்டா்கள்- அபிஷேக் சிங், ஆகாஷ் மிஸ்ரா, பிஜாய் வா்கீஸ், ஜெய் குப்தா, மெஹ்தாப் சிங், பிரம்வீா், ரிக்கி மிட்டெய், ரோஷன் சிங் நவோரம். மிட்பீல்டா்கள்- அனிருத் தாபா, ஆஷிக் குருனியன், ஜிதின், லாம்லெம்துலாங்கா, லால்ரினியலா, டோம்பா சிங்.
பாா்வா்ட்- டேவிட் லால்ஹலசிங், எட்மண்ட், லிஸ்டன்கோலோகோ, மன்வீா் சிங், முகமது சுஹைல், ரயான் வில்லியம்ஸ்.