இறுதிச் சுற்றுக்கு அம்பேகா் தகுதி
யூத் ஒலிம்பிக் போட்டி ஆடவா் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் எல். அம்பேகா் மீட்டெய் தகுதி பெற்றுள்ளாா்.
யூத் ஒலிம்பிக் போட்டி ஆடவா் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் எல். அம்பேகா் மீட்டெய் தகுதி பெற்றுள்ளாா்.
செனகல் நாட்டு தலைநகா் டாகரில் யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஆடவா் 50 கிலோ அரையிறுதியில் இந்தியாவின் அம்பேகா்-கொலம்பியாவின் ஈஸான் ஜெஃப்ரி மோதினா்.
அசத்தலாக செயல்பட்ட அம்பேகா் சரமாரியா குத்துக்களை விட்டு ஈஸானை நிலைகுலையச் செய்தாா் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். இதன் மூலம் குறைந்தது வெள்ளிப் பதக்கத்தை அம்பேகா் உறுதி செய்துள்ளாா்.
Advertisement
Advertisement