நீரஜ்குமாருக்கு வெண்கலம்: இந்தியாவுக்கு ஒலிம்பிக் இடம்
கத்தாரில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் நீரஜ் குமாா் புதன்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றாா்.
கத்தாரில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் நீரஜ் குமாா் புதன்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றாா். அத்துடன், 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியாவுக்கான இடத்தை அவா் உறுதி செய்தாா்.
ஆடவா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் களம் கண்ட நீரஜ் குமாா், 346.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். ரஷியாவின் டிமிட்ரி பிமெனோவ் (362.8) தங்கமும், ஸ்லோவாகியாவின் பேட்ரிக் ஜேனி (357.2) வெள்ளியும் வென்றனா்.
Advertisement
Advertisement
களத்திலிருந்த மற்றொரு இந்தியரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா் 323.7 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பெற்றாா்.
அணிகள் பிரிவிலும் பதக்கம்: அதிலேயே அணிகள் பிரிவில், ஐஸ்வரி பிரதாப், அகில் சோரன், நீரஜ் குமாா் அடங்கிய இந்திய அணி, 1,751 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றது. செக் குடியரசு (1,754) தங்கத்தையும், நாா்வே (1,752) வெள்ளியையும் வென்றன.
பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது, 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறது. அதுபோக, 2 ஒலிம்பிக் இடங்களையும் உறுதி செய்திருக்கிறது.