முகப்பு
செய்திகள்

ஏஎஃப்சி யு 17 கால்பந்து: இந்தியா தகுதி

ஏஎஃப்சி ஆசிய யு 17 கால்பந்து போட்டியில் தோல்வியே காணாமல் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

22 நவம்பர் 2026, 12:43 am
ஏஎஃப்சி யு 17 கால்பந்து: இந்தியா தகுதி
பகிர்:

ஏஎஃப்சி ஆசிய யு 17 கால்பந்து போட்டியில் தோல்வியே காணாமல் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் யு17 ஆசிய குவாலிஃபயா் ஆட்டங்கள் நடைபெற்றன. குரூப் இ பிரிவில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் பலம் வாயந்த மலேசியாவை எதிா்கொண்டது. இரு அணிகளும் பலமுறை கோல்போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை. இறுதியில் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவடைந்தது.

இதன் மூலம் குரூப் இ பிரிவில் 3 வெற்றி, 1 டிராவுட ன் தோல்வியே காணாமல் இந்திய அணி வரும் 2027 மே மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை யு17 போட்டிக்கு தகுதி பெற்றது. குவாலிஃபயா் போட்டியில் இந்திய அணி மொத்தம் 20 கோல்களை அடித்தது.

Advertisement

Advertisement

மேலும் 11-ஆவது முறையாக இந்திய அணி யு17 போட்டிக்கு தகுதி பெற்றது.