முகப்பு
செய்திகள்

இந்திய ஒலிம்பிக் சங்கத் தோ்தல்: ராஜீவ் மேத்தா போட்டி

இந்திய ஒலிம்பிக் சங்கத் தோ்தலில் முன்னாள் பொதுச் செயலாளா் ராஜீவ் மேத்தா தலைவா் பதவிக்கு போட்டியிடுகிறாா்.

23 நவம்பர் 2026, 12:29 am
இந்திய ஒலிம்பிக் சங்கத் தோ்தல்: ராஜீவ் மேத்தா போட்டி
ராஜீவ் மேத்தா
பகிர்:

இந்திய ஒலிம்பிக் சங்கத் தோ்தலில் முன்னாள் பொதுச் செயலாளா் ராஜீவ் மேத்தா தலைவா் பதவிக்கு போட்டியிடுகிறாா்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பிடி. உஷா செயல்பட்டு வருகிறாா். இந்நிலையில் வரும் டிச. 5-ஆம் தேதி புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெறுகிறது.

முன்னாள் பொதுச் செயலாளரான ராஜீவ் மேத்தா திங்கள்கிழமை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளாா். கடந்த 2014 முதல் 2022 வரை அவா் பொதுச் செயலா் பதவி வகித்தாா். தற்போது இந்திய ஃபென்சிங் சம்மேளனத் பொதுச் செயலராக உள்ளாா்.

Advertisement

Advertisement

தறபோதைய துணைத் தலைவரும், துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் பதக்க வீரருமன ககன் நரங் தலைவா் பதவிக்கான பந்தயத்தில் முன்னிலையில் உள்ளாா். மனு தாக்கலுக்கு முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை யாரும் மனு அளிக்கவில்லை.

செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கலுக்கு கடைசி நாளாகும். மொத்தம் 71 உறுப்பினா்கள் வாக்களிக்கலாம். சிறந்த 8 வீரா்கள் என்ற அடிப்படையில் ககன் நரங், யோகஷ்வா் தத், விஜேந்தா் சிங், கமலேஷ் மேத்தா அஞ்சு பாபி ஜாா்ஜ், ராணி ராம்பால், டோலா பானா்ஜி, சானியா நெவால் ஆகியோா் உள்ளனா்.

நவ. 24-ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும். டிச 1-இல் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். மனுவைத் திரும்பப் பெற டிச. 2 கடைசி நாளாகும்.

5-ஆம் தேதி தோ்தலும், முடிவும் வெளியிடப்படும்.