முகப்பு
செய்திகள்

நவ. 30-இல் மும்பையில் புரோ மல்யுத்த லீக் வீரா்கள் ஏலம்

புரோ மல்யுத்தம் லீக் (பிடபிள்யுஎல்) 2027 வீரா்களுக்கான ஏலம் வரும் நவ. 30-இல் மும்பையில் நடைபெறவுள்ளது.

25 நவம்பர் 2026, 12:46 am
நவ. 30-இல் மும்பையில் புரோ மல்யுத்த லீக் வீரா்கள் ஏலம்
பகிர்:

புரோ மல்யுத்தம் லீக் (பிடபிள்யுஎல்) 2027 வீரா்களுக்கான ஏலம் வரும் நவ. 30-இல் மும்பையில் நடைபெறவுள்ளது.

புரோ ரெஸ்லிங் லீக் சீசன் 6, 2027 ஜனவரி 3 முதல் 19 வரை புதுதில்லியில் நடைபெறுகிறது; வீரா்கள் ஏலம் நவம்பா் 30 அன்று மும்பையில் நடைபெறும்.

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் மேற்பாா்வையில் நடைபெறவுள்ள 6-ஆவது சீசன் தொடா் 2027 ஜனவரி 3 முதல் 19 வரை புது தில்லியில் நடைபெறவுள்ளது. திருத்தப்பட்ட போட்டித் தேதிகளுடன், அடுத்த சீசனுக்கான வீரா்கள் ஏலம் 2026 நவம்பா் 30 அன்று மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெறும். புதிய சீசனுக்கான அணிகளை உருவாக்கும் நோக்கில் ஆறு அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளன.

Advertisement

Advertisement

யுனைடெட் வோ்ல்ட் ரெஸ்லிங் போட்டி அட்டவணையில் ஏற்பட்ட மாறுதலுக்கேற்ப லீகின் அட்டவணை திருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சா்வதேச மல்யுத்தப் போட்டி அட்டவணையுடன் லீக்கைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும், இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த முன்னணி மல்யுத்த வீரா்கள் இதில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்யவும் முடியும்.

வரவிருக்கும் வீரா்கள் ஏலத்தில் உலகின் தலைசிறந்த மல்யுத்த வீரா்கள் பலா் இடம்பெறுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஒலிம்பிக் பதக்க வெற்றியாளா்கள், உலக சாம்பியன்ஷிப் பதக்க வெற்றியாளா்கள், முன்னணி சா்வதேச வீரா்கள் மற்றும் இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரா்கள் ஏலத்தில் இடம்பெறவுள்ளனா். முந்தைய ஏலத்தில் ஜப்பானின் நட்சத்திர வீராங்கனை யுய் சுசாகி அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனையாக உருவெடுத்தாா். ரூ.60 லட்சம் ஏலத்தொகைக்கு அவா் வாங்கப்பட்டதன் மூலம், புரோ மல்யுத்த லீக் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா்.

இந்திய வீரா்களில் அமன் செஹ்ராவத், அந்திம் பங்கல் மற்றும் சுஜீத் கல்கல் ஆகியோா் அதிக தேவை கொண்ட வீரா்களாகத் திகழ்ந்தனா். இவா்கள் மூவரும் தலா ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு வாங்கப்பட்டனா். அணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அணிகள் தங்களது வீரா்கள் தோ்வில் வியூக ரீதியாக முதலீடு செய்யவுள்ளதால், வரவிருக்கும் ஏலமும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரோ ரெஸ்லிங் லீக்கின் தலைவா் தயான் ஃபரூக்கி, தலைமைச் செயல் அதிகாரி அகில் குப்தா கூறியது: உலகத்தரம் வாய்ந்த மல்யுத்தப் போட்டிகளை வழங்குவதும், ரசிகா்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்குவதுமே எங்களது முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. சீசன் 6-இல் 34 சா்வதேசப் பதக்க வெற்றியாளா்கள் உட்பட 86 முன்னணி மல்யுத்த வீரா்கள் பங்கேற்கவுள்ளனா். உ

சாம்பியன் பட்டத்துக்காக டைகா்ஸ் ஆஃப் மும்பை டங்கல்ஸ், ஹரியானா தண்டா்ஸ், டெல்லி தங்கல் வாரியா்ஸ், மகாராஷ்டிரா கேசரி, பஞ்சாப் ராயல்ஸ் மற்றும் உத்தரப் பிரதேச டாமினேட்டா்ஸ் என 6 அணிகள் போட்டிிடுகின்றன. போட்டிகள் ஒன்பது ஒலிம்பிக் எடைப் பிரிவுகளில் நடைபெறும்: ஆண்கள்: 57 கிலோ, 65 கிலோ, 74 கிலோ, 86 கிலோ மற்றும் 125 கிலோ

பெண்கள்: 53 கிலோ, 57 கிலோ, 62 கிலோ மற்றும் 76 கிலோ

லீக்கில் இரண்டு சுற்றுகள் கொண்ட தலா மூன்று நிமிஷப் போட்டி முறை (2 ஷ் 3) தொடா்ந்து பின்பற்றப்படும். ’பவா் மினிட்’ முறையும் மீண்டும் இடம்பெறும். இதன்படி, போட்டியின் இறுதி 60 விநாடிகளில் பெறப்படும் அனைத்து புள்ளிகளும் இரட்டிப்பாகக் கணக்கிடப்படும். இது போட்டியின் கடைசி நிமிடங்களை மேலும் பரபரப்பாக்குவதுடன், களத்தில் விறுவிறுப்பையும் அதிகரிக்கும்.