முகப்பு

பிடபிள்யூஎல் சீசன் 6: ஏலம், போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு!

தில்லியில் நடைபெறவிருக்கும் புரோ மல்யுத்தம் லீக் போட்டிகளுக்கான ஆறாவது சீசன் குறித்து...

44 வினாடிகள் முன்பு
பிடபிள்யூஎல் சீசன் 6: ஏலம், போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு!
பிடபிள்யூஎல் வீரர் ஏலத்துக்கான போஸ்டர். பிடபிள்யூஎல் இலச்சினை. - படங்கள்: எக்ஸ் / பிடபிள்யூஎல்
பகிர்:

தில்லியில் நடைபெறவிருக்கும் புரோ ரெஸ்லீங் லீக்கின் (பிடபிள்யூஎல்) ஆறாவது சீசனுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகள் கேடி ஜாதவ் திடலில் நடைபெற இருக்கின்றன.

முதல்முதலாக 2015ல் இந்த லீக் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நடத்துகின்றன. இதனால் மல்யுத்தம் போட்டிகளில் இந்திய வீரர்கள் நல்ல அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

பிடபிள்யூஎல் நடப்பு சீசனுக்கான ஏலம் வரும் நவ.30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலம் மும்பையில் நடைபெற இருக்கிறது.

Advertisement

Advertisement

யுனைடெட் வேர்ல்ட் ரெஸ்ட்லிங் காலண்டரின்படி இந்தப் போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியா மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து சிறந்த வீரர்களும் இதில் பங்கேற்க வாய்ப்பு உருவாக்கப்படுள்ளன.

இந்தத் தொடரில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். முந்தைய ஏலத்தில் ஜப்பானின் முன்னணி வீராங்கனை யுய் சுசாகி ரூ.60 லட்சத்துக்கு ஏலம் சென்றார். அதுதான் இந்த லீக்கின் அதிகபட்ச தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமன் ஷெராவத், அன்டிம் பங்கல், சுஜீத் கல்கல் ஆகிய இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் தலா ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்கள்.

சீசன் 6ல் 6 அணிகள் விளையாடுகின்றன. இதில் மும்பை டைகர்ஸ், ஹரியாணா தண்டர்ஸ், டெல்லி தங்கல் வாரியர்ஸ், மகாராஷ்டிரா கேசரி, பஞ்சாப் ராயல்ஸ் மற்றும் யுபி டாமினேட்டர்ஸ் ஆகிய அணிகள் இருக்கின்றன.

அதிகமாக (2) பஞ்சாப் ராயல்ஸ் இந்த லீக்கில் சாம்பியனாகி இருப்பதும் கவனிக்கத்தக்கது. இந்தப் போட்டிகள் 57 கிலோ, 65 கிலோ, 74 கிலோ, 86 கிலோ மற்றும் 125 கிலோ (ஆண்கள்), மற்றும் 53 கிலோ, 57 கிலோ, 62 கிலோ மற்றும் 76 கிலோ (பெண்கள்) 9 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.

summary

Pro Wrestling League PWL Season 6 to be held in Delhi from January 3-19

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.