FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இலவசமாக ஒளிபரப்பாகும் ஐஎஸ்எல் போட்டிகள்..! முதல்முறையாக இம்பால் திடலில்!

ஐஎஸ்எல் 2026-27 சீசனுக்கான போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பாகுவது குறித்து...

ஐஎஸ்எல் கோப்பைகள் - படம்: எக்ஸ் / இந்தியன் சூப்பர் லீக்
பகிர்:

இந்தியன் சூப்பர் லீக் 2026-27 சீசனுக்கான கால்பந்துப் போட்டிகள் யூடியூபில் நேரடியாக இலவசமாக ஒளிப்பராகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கால்பந்து லீக்கில் முக்கியமானதாக இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகள் இருக்கின்றன. இதன் வணிக ரீதியான வருவாய் இழப்பினால், தற்போது பல பிரச்னைகளை சந்தித்துள்ளன.

நடப்பு சீசனுக்கான போட்டிகள் அக்.10 முதல் தொடங்கி மே மாதம் வரை நடைபெற இருக்கின்றன. இதில் முதல்கட்ட போட்டிகள் அக்.10 முதல் ஜன.17 வரை நடைபெற இருக்கின்றன.

Advertisement

Advertisement

ஐஎஸ்எல் 13ஆவது சீசனில் 13 அணிகள் பங்குபெற இருக்கின்றன. முதல் கட்டமாக 78 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. பொதுவாக இந்தப் போட்டிகள் வெள்ளி, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறவிருக்கின்றன.

இந்த சீசனில் புதியதாக சர்ச்சில் பிரதர்ஸ் அணி களமிறங்குகிறது. தி ரெட் மெஷிஸ் என்றழைக்கப்படும் இந்த அணி எஃப்சி கோவாவின் உள்ளூர் எதிரணியாகக் கருதப்படுகிறது.

முதல்முறையாக வடக்கிழக்கில் இம்பால் நகரில் குமன் லாம்பக் திடலில் ஐஎஸ்எல் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி வரும் நவ.24ஆம் தேதி நார்த் ஈஸ்ட் எப்ஃசி - ஸ்போர்டிங் கிளப் தில்லி அணியும் மோதுகின்றன.

summary

ISL 2026-27 season to be live and free on Youtube this season

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments