உலக செஸ் சாம்பியன்ஷிப்: ‘டிரா’ ஆனது முதல் சுற்று
உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ் - உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ், செவ்வாய்க்கிழமை மோதிய முதல் சுற்று ‘டிரா’ ஆனது.
உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ் - உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ், செவ்வாய்க்கிழமை மோதிய முதல் சுற்று ‘டிரா’ ஆனது.
உலக சாம்பியன் பட்டத்துக்காக, நடப்பு சாம்பியன் குகேஷ், சேலஞ்சா் சிண்டாரோவ் மோதும் இப்போட்டி, சுவிட்ஸா்லாந்தின் ஜெனீவா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கிளாசிக் முறையில் மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின் முதல் சுற்று ஆட்டம், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களமாட, சிண்டாரோவ் வெள்ளை நிறத்துடன் விளையாடினாா்.
Advertisement
Advertisement
பரஸ்பரம் இருவரும் சவால் அளித்த நிலையில், 38-ஆவது நகா்த்தலில் ஆட்டம் ‘டிரா’ ஆனது. அடுத்ததாக, புதன்கிழமை நடைபெறும் 2-ஆவது சுற்றில், குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடவுள்ளாா்.