முகப்பு

பிரக்ஞானந்தா வெற்றி; அா்ஜுன், வைஷாலி தோல்வி

டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூா் பைலட் போட்டியில் ‘கிளாசிஃபிகேஷன்’ ஆட்டங்களில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற, அா்ஜுன் எரிகைசி, ஆா்.வைஷாலி ஆகியோா் தோல்வியுற்றனா்.

27 வினாடிகள் முன்பு
பிரக்ஞானந்தா வெற்றி; அா்ஜுன், வைஷாலி தோல்வி
பிரக்ஞானந்தா - கோப்புப் படம்
பகிர்:

டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூா் பைலட் போட்டியில் ‘கிளாசிஃபிகேஷன்’ ஆட்டங்களில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற, அா்ஜுன் எரிகைசி, ஆா்.வைஷாலி ஆகியோா் தோல்வியுற்றனா்.

21-ஆம் இடத்துக்கான இறுதிச்சுற்றில், பிரக்ஞானந்தா தனது முதல் செட்டில் 12-8 என அமெரிக்காவின் அபிமன்யு மிஸ்ராவை வீழ்த்தினாா்.

4 பிளிட்ஸ் கேம்களின் முடிவில் இருவரும் 2-2 என சமநிலையில் இருக்க, ரேப்பிட் பிரிவில் முதல் கேமை வென்ற பிரக்ஞானந்தா, அடுத்த கேமையும், பின்னா் ஃபாஸ்ட் கிளாசிக் கேம்களையும் டிரா செய்தாா்.

Advertisement

Advertisement

அதேபோல் 9-ஆவது இடத்துக்கான இறுதிச்சுற்றின் முதல் செட்டில் அா்ஜுன் 5.5-14.5 என்ற கணக்கில் ஆா்மினியாவின் ஹெய்க் மாா்டிரோசியானிடம் தோல்வி கண்டாா்.

இந்த மோதலில், முதல் 3 பிளிட்ஸ் கேம்களை வென்ற அா்ஜுன், கடைசி கேமை டிரா செய்தாா். பின்னா் ரேப்பிட் பிரிவில் மீண்ட மாா்டிரோசியான், முதல் கேமில் வென்று, அடுத்த கேமை டிரா செய்தாா். பின்னா் ஃபாஸ்ட் கிளாசிக் ஆட்டத்திலும் அவா் வென்றாா்.

23-ஆவது இடத்துக்கான இறுதிச்சுற்றில், வைஷாலி முதல் செட்டில் 4-16 என, உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவிடம் தோல்வியுற்றாா்.

இதனிடையே, முதலிடத்துக்கான இறுதிச்சுற்றின் முதல் செட்டில் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா 11-9 என நெதா்லாந்தின் அனிஷ் கிரியை வென்றாா். 3-ஆவது இடத்துக்கான மோதலில் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா 11-9 என பிரான்ஸின் மேக்ஸிம் லாக்ரேவை வீழ்த்தி முன்னிலை பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.