முகப்பு

வெற்றியில் இன்டர் மிலன், அத்லெடிகோ..! சமனில் முடித்த பிஎஸ்ஜி, மான்செஸ்டர் யுனைடெட்!

சாம்பியன்ஸ் லீக்கில் இன்றைய நாளில் நடந்த போட்டிகள் குறித்து...

வெற்றியில் இன்டர் மிலன், அத்லெடிகோ..! சமனில் முடித்த பிஎஸ்ஜி, மான்செஸ்டர் யுனைடெட்!
இன்டர் மிலன், பிஎஸ்ஜி, அத்லெடிகோ மாட்ரிட் அணிகளின் ஸ்கோர் கார்டு - படங்கள்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்
பகிர்:

சாம்பியன்ஸ் லீக்கில் இன்றைய நாளில் நடந்த ஏழு போட்டிகளில் இரண்டு ஆட்டங்கள் சமனிலும் ஐந்து ஆட்டங்கள் வெற்றியிலும் முடிந்துள்ளன.

ஜெர்மனி ஜெயண்ட்ஸ் அணியான பயர்ன் மியூனிக்கை லில் எல்ஒஎஸ்சி அணி 2-1 என வென்று பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

இதேபோல் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி - ரோம் அணிகள் மோதிய போட்டி 2-2 என சமனில் முடிவடைந்தது. பிஎஸ்ஜியில் நட்சத்திர வீரர்கள் பலர் காயத்தினால் விளையாடாமல் இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

மான்செஸ்டர் யுனைடெட் அணியும் ஸ்போர்டிங் சிபி அணியும் மோதிய ஆட்டம் 2-2 என சமனில் முடிவடைந்தது. யுனைடெட் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.

இண்டர் மிலன் அணி 2-0 என விஎஃப்பி ஸ்டட்கார்ட் அணியை வீழ்த்தியது. கேப்டன் லொடாரோ மார்டினேஸ் அசத்தல் கோல் அடித்தார்.

அத்லெடிகோ மாட்ரிட் அணி 2-0 என வைக்கிங் அணியை வீழ்த்தியது. இதில் சார்லோத், ஜூலியன் அல்வாரெஸ் கோல் அடித்தார்கள்.

ஃபெனெர்பாஹ்சே எஸ்கே அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி ஷக்தார் டொனெட்ஸ்க்வை வீழ்த்தியது. பார்சிலோனா அணி 4-1 என சாபா அணியை வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியல்

1. ரியல் மாட்ரிட் - 15 புள்ளிகள்

2. பிஎஸ்ஜி - 13 புள்ளிகள்

3. கோமோ - 12 புள்ளிகள்

4. பார்சிலோனா - 12 புள்ளிகள்

5. லிவர்பூல் - 12 புள்ளிகள்

6. ரியல் பெட்டிஸ் - 12 புள்ளிகள்

7. ஆர்செனல் - 11 புள்ளிகள்

8. மான்செஸ்டர் சிட்டி - 10 புள்ளிகள்

summary

Inter Milan and Atlético secure wins..! PSG and Manchester United finish in a draw!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.