FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டு ரிகர்வ் வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

58 வினாடிகள் முன்பு
ஆசிய விளையாட்டு ரிகர்வ் வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய அணி - x
பகிர்:

ஆசிய விளையாட்டு ரிகர்வ் வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20-ஆவது தொடர் ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, சீனா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

14-வது நாளான இன்று ரிகர்வ் வில்வித்தை மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

Advertisement

Advertisement

இந்திய அணியின் அங்கிதா பகத், கீர்த்தி, அனில் மொஹோட் ஆகிய வீராங்கனைகள் 4 - 2 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை வென்றனர்.

இதன்மூலம், ரிகர்வ் வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ள்ளது.

அக். 2 காலை நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் 12 தங்கங்களுடன் இந்திய அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

summary

Indian women's recurve team of Ankita Bhakat, Kirti, and Kumkum Anil Mohod won a historic gold

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments