ரிகர்வ் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் தங்கம்..! 17 வயது வீராங்கனை வரலாற்றுச் சாதனை!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக இந்தியாவுக்கு ரிகர்வ் வில்வித்தையில் தங்கம் கிடைத்துள்ளது குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக ரிகர்வ் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. 17 வயதான வீராங்கனை கும்கும் அனில் இதனைப் பெற்றுத்தந்து வரலாற்றுச் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மகளிருக்கான தனிநபர் ரிகர்வ் வில்வித்தையில் இந்திய வீராங்கனை கும்கும் அனில் மோஹோத் தென்கொரியாவின் ஹோ யே-ஜின் என்பவருடன் இறுதிப் போட்டியில் மோதினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை 27-29, 29-29, 30-29, 27-28, 30-28 என ஐந்து செட்களில் அசத்திய கும்கும் அனில் மோஹோத் பின்னர் ஷூட் அவுட்டில் 10-8 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றார்.
ஆசிய விளையாட்டில் முதல்முறையாக இந்தியாவுக்கு மகளிர் பிரிவில் தங்கம் கிடைத்துள்ளது. இத்துடன் இந்தியாவுக்கு 77 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
மொத்தமாக 17 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். தரவரிசையில் இந்தியா ஐந்தாம் இடத்தில் நீட்டிக்கிறது.
The 17-year-old Kumkum Anil Mohod creates history by winning India’s first-ever Asian Games gold in the women’s individual recurve event
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.