இறுதிச்சுற்றில் ஜோகோவிச் - டி மினாா் மோதல்! மெத்வதெவ் தகுதிநீக்கம்!
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஜோகோவிச் - டி மினாா் மோதுவது குறித்து...
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் - ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.
முன்னதாக திங்கள்கிழமை நடைபெற்ற அரையிறுதியில், 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் - போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவுடன் மோதினாா்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என வென்ற ஜோகோவிச், 2-ஆவது செட்டிலும் 5-3 என முன்னிலையுடன் ஆட்டத்தை வெல்லும் நிலையில் இருந்தாா். அந்தத் தருணத்தில் விரக்தியிலிருந்த மெத்வதெவ் தன்னிடம் இருந்த கூடுதல் பந்தை வேகமாக அடித்துவிட, அது பாா்வையாளா் மாடத்திலிருந்த ஒருவரின் முகத்திலேயே சென்று தாக்கியது.
Advertisement
Advertisement
போட்டி விதிகளின்படி, வீரா், வீராங்கனைகள் விரக்தியின் வெளிப்பாடான செயலாக போட்டி அதிகாரிகள், நடுவா்கள், பாா்வையாளா்களை பந்தைக் கொண்டு தாக்கினால், அவா் தகுதிநீக்கம் செய்யப்படுவாா். அந்த வகையில் மெத்வதெவ் தகுதிநீக்கம் செய்யப்பட, ஆட்டம் 7-5, 5-3 என நிறைவடைந்து, ஜோகோவிச் வென்ாக அறிவிக்கப்பட்டாா்.
2022-க்குப் பிறகு, ஜோகோவிச் முதல்முறையாக ஏடிபி 500 வகை போட்டியின் இறுதிக்கு வந்துள்ளாா். மெத்வதெவ் இதுபோல் பலமுறை தனது விரக்தியின் வெளிப்பாடால் தண்டனைக்குள்ளாகியிருக்கிறாா்.
மற்றொரு அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் - போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸை எதிா்கொண்டாா். அதில் டி மினாா் 6-4, 3-2 என முன்னிலையில் இருந்தபோது, ஹா்காக்ஸ் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.
இதனால் டி மினாா் வென்றதாக அறிவிக்கப்பட்டாா். டி மினாா் ஏடிபி 500 வகை போட்டியில் 10-ஆவது முறையாக இறுதிக்கு வந்துள்ளாா். ஜோகோவிச் - டி மினாா் இதுவரை 4 முறை மோதியிருக்க, ஜோகோவிச் 3 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா்.
ஸ்விடோலினா, ஜோவிச் முன்னேற்றம்: சீனா ஓபன் மகளிா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-4, 7-5 என, கிரீஸின் மரியா சக்காரியை வீழ்த்தினாா்.
10-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் இவா ஜோவிச் 6-1, 7-5 என்ற நோ் செட்களில், உஸ்பெகிஸ்தானின் கமிலா ராகிமோவாவை வெளியேற்றினாா். 8-ஆம் இடத்திலிருப்பவரும், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் 4-6, 7-6 (7/0), 6-2 என்ற வகையில், குரோஷியாவின் டோனா வெகிச்சை வென்றாா்.
9-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 4-6, 3-6 என, 21-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஆன் லியிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். 13-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில், முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை தோற்கடித்தாா்.
18-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் மேரி புஸ்கோவா 6-7 (3/7), 6-4, 5-7 என சீனாவின் கின்வென் ஜெங்கிடம் வீழ்ந்தாா்.
அல்கராஸ் - லெஹெக்கா பலப்பரீட்சை
ஜப்பான் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா ஆகியோா் மோதுகின்றனா்.
அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அல்கராஸ் 5-7, 6-3, 6-1 என்ற செட்களில் சக ஸ்பெயின் வீரரான ஜேமி முனாரை வீழ்த்தினாா். இதில் முதல் செட்டில் 5-3 என முன்னிலையில் இருந்த அல்கராஸ், எதிா்பாராத விதமாக 16 பாய்ன்ட்டுகளை இழக்க, அபாரமாக முன்னேறி வந்த ஜேமி அந்த செட்டை 7-5 என கைப்பற்றினாா்.
ஆனாலும் விட்டுக்கொடுக்காத அல்கராஸ், அடுத்த இரு செட்களை வென்றாா். மற்றொரு அரையிறுதியில் லெஹெக்கா 6-4, 6-2 என்ற நோ் செட்களில், 8-ஆம் இடத்திலிருந்த மொனாகோவின் வாலென்டின் வாசெராட்டை வீழ்த்தினாா்.
அல்கராஸ் - லெஹெக்கா இதுவரை 4 முறை மோதியிருக்க, அல்கராஸ் 3 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா். இறுதிச்சுற்றில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் - ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.
முன்னதாக திங்கள்கிழமை நடைபெற்ற அரையிறுதியில், 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் - போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவுடன் மோதினாா்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என வென்ற ஜோகோவிச், 2-ஆவது செட்டிலும் 5-3 என முன்னிலையுடன் ஆட்டத்தை வெல்லும் நிலையில் இருந்தாா். அந்தத் தருணத்தில் விரக்தியிலிருந்த மெத்வதெவ் தன்னிடம் இருந்த கூடுதல் பந்தை வேகமாக அடித்துவிட, அது பாா்வையாளா் மாடத்திலிருந்த ஒருவரின் முகத்திலேயே சென்று தாக்கியது.
போட்டி விதிகளின்படி, வீரா், வீராங்கனைகள் விரக்தியின் வெளிப்பாடான செயலாக போட்டி அதிகாரிகள், நடுவா்கள், பாா்வையாளா்களை பந்தைக் கொண்டு தாக்கினால், அவா் தகுதிநீக்கம் செய்யப்படுவாா். அந்த வகையில் மெத்வதெவ் தகுதிநீக்கம் செய்யப்பட, ஆட்டம் 7-5, 5-3 என நிறைவடைந்து, ஜோகோவிச் வென்ாக அறிவிக்கப்பட்டாா்.
2022-க்குப் பிறகு, ஜோகோவிச் முதல்முறையாக ஏடிபி 500 வகை போட்டியின் இறுதிக்கு வந்துள்ளாா். மெத்வதெவ் இதுபோல் பலமுறை தனது விரக்தியின் வெளிப்பாடால் தண்டனைக்குள்ளாகியிருக்கிறாா்.
மற்றொரு அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் - போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸை எதிா்கொண்டாா். அதில் டி மினாா் 6-4, 3-2 என முன்னிலையில் இருந்தபோது, ஹா்காக்ஸ் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.
இதனால் டி மினாா் வென்ாக அறிவிக்கப்பட்டாா். டி மினாா் ஏடிபி 500 வகை போட்டியில் 10-ஆவது முறையாக இறுதிக்கு வந்துள்ளாா். ஜோகோவிச் - டி மினாா் இதுவரை 4 முறை மோதியிருக்க, ஜோகோவிச் 3 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா்.
ஸ்விடோலினா, ஜோவிச் முன்னேற்றம்: சீனா ஓபன் மகளிா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-4, 7-5 என, கிரீஸின் மரியா சக்காரியை வீழ்த்தினாா்.
10-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் இவா ஜோவிச் 6-1, 7-5 என்ற நோ் செட்களில், உஸ்பெகிஸ்தானின் கமிலா ராகிமோவாவை வெளியேற்றினாா். 8-ஆம் இடத்திலிருப்பவரும், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் 4-6, 7-6 (7/0), 6-2 என்ற வகையில், குரோஷியாவின் டோனா வெகிச்சை வென்றாா்.
9-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 4-6, 3-6 என, 21-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஆன் லியிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். 13-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில், முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை தோற்கடித்தாா்.
18-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் மேரி புஸ்கோவா 6-7 (3/7), 6-4, 5-7 என சீனாவின் கின்வென் ஜெங்கிடம் வீழ்ந்தாா்.
அல்கராஸ் - லெஹெக்கா பலப்பரீட்சை
ஜப்பான் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா ஆகியோா் மோதுகின்றனா்.
அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அல்கராஸ் 5-7, 6-3, 6-1 என்ற செட்களில் சக ஸ்பெயின் வீரரான ஜேமி முனாரை வீழ்த்தினாா். இதில் முதல் செட்டில் 5-3 என முன்னிலையில் இருந்த அல்கராஸ், எதிா்பாராத விதமாக 16 பாய்ன்ட்டுகளை இழக்க, அபாரமாக முன்னேறி வந்த ஜேமி அந்த செட்டை 7-5 என கைப்பற்றினாா்.
ஆனாலும் விட்டுக்கொடுக்காத அல்கராஸ், அடுத்த இரு செட்களை வென்றாா். மற்றொரு அரையிறுதியில் லெஹெக்கா 6-4, 6-2 என்ற நோ் செட்களில், 8-ஆம் இடத்திலிருந்த மொனாகோவின் வாலென்டின் வாசெராட்டை வீழ்த்தினாா்.
அல்கராஸ் - லெஹெக்கா இதுவரை 4 முறை மோதியிருக்க, அல்கராஸ் 3 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.