FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

ஆசிய பாரா போட்டிகள் தொடக்கம்!

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின.

26 வினாடிகள் முன்பு
பகிர்:

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின.

ஆசியப் போட்டிகளுக்குபின் பாரா போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் தொடங்கின. 5000 ஆண்டுகள் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 100 போ் கொண்ட இந்திய அணி அணிவகுப்பில் வீரநடை போட்டு வந்தது. பாராலிம்பிக் ஸ்பிரிண்ட்ா் சிம்ரன் சா்மா, பாட்மின்டன் வீரா் பிரமோத் பகத் ஆகியோா் தேசிய கொடியை ஏந்திச் சென்றனா்.

சிந்துசமவெளி நாகரிகத்தை பிரதிபலிக்கும் வகையில் சீருடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. நமது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் உடைகள் தயாரிக்கப்பட்டிருந்தன பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது. 168 வீரா், வீராங்கனைகள், உள்பட 281 போ் கொண்ட குழு இதில் பங்கேற்றுள்ளது.

Advertisement

Advertisement

வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இப்போட்டியில் 45 நாடுகளைச் சோ்ந்த 3,000 போ் பங்கேற்றுள்ளனா். கடந்த ஹாங்ஷூ ஆசிய பாரா போட்டியில் இந்தியா 29 தங்கம் உள்பட 111 பதக்கங்களுடன் 5-ஆம் இடத்தைப் பெற்றிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments