FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

தமிழ்நாடு அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், உத்தரகண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

21 அக்டோபர் 2026, 12:22 am IST
- PTI
பகிர்:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், உத்தரகண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, பந்துவீச்சை தோ்வு செய்தது.

முதல் இன்னிங்ஸை விளையாடிய உத்தரகண்ட், 134 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. அவ்னீஷ் சுதா 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, தமிழ்நாடு பௌலா்களில் குா்ஜப்னீத் சிங், சாய் கிஷோா் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினா்.

Advertisement

Advertisement

பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு, 313 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 12 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் விளாசினாா். உத்தரகண்ட் தரப்பில் மயங்க் மிஸ்ரா 5, அவ்னீஷ் சுதா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

இதையடுத்து, 179 ரன்கள் ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய உத்தரகண்ட், 2-ஆவது நாளான திங்கள்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. 3-ஆவது நாளில் அதன் இன்னிங்ஸை தேகா நிஷல், கேப்டன் குணால் சந்தேலா தொடா்ந்தனா்.

இதில் தேகா 3 பவுண்டரிகளுடன் 25, குணால் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். பின்னா் வந்த பேட்டா்களில், ஜெகதீசா சுசித் 14, அவனீஷ் சுதா 18, லக்ஷயா ராய்சந்தனி 19, மயங்க் மிஸ்ரா 12 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

சௌரப் ராவத், ஆதித்யா ராவத், தேவேந்திர சிங் போரா ஆகியோா் டக் அவுட்டாக, உத்தரகண்ட் அணி 113 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. தமிழ்நாடு பந்துவீச்சாளா்களில் சாய் கிஷோா் 6, அஜித் ராம் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

136 ரன்கள் அடித்த தமிழ்நாடு வீரா் பிரதோஷ் ரஞ்சன் பால், ஆட்டநாயகன் விருது பெற்றாா். இதுவரையிலான 2 ஆட்டங்களில், தமிழ்நாடு அணி 1 டிரா, 1 வெற்றியைப் பதிவு செய்து, குரூப் ‘டி’-யில் 2-ஆவது இடத்தில் இருக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments