FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: மகளிா் இறுதியில் இந்தியா-தாய்லாந்து

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் மகளிா் இறுதியில் இந்தியா-தாய்லாந்து மோதவிருப்பது பற்றி..

29 அக்டோபர் 2026, 3:16 am
பகிர்:

சென்னையில் காரப்பாக்கத்தில் உள்ள கே சி ஜி டெக் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் லீக் பிரிவு ஆட்டங்களின் முடிவில் ஏ குரூப்பில் இருந்து இந்தியா, யு ஏ இ அணிகளும், பி குரூப்பில் இருந்து பஹ்ரைன், இலங்கை அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

வியாழக்கிழமை அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி -இலங்கை உடன் மோதுகிறது.

இறுதியில் இந்தியா

Advertisement

Advertisement

மகளிா் பிரிவில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று லீக் முறையில் விளையாடின. இதில் இந்திய அணி 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. தாய்லாந்து அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3-இல் வெற்றி பெற்றது.

இந்தியா, தாய்லாந்து அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று வியாழக்கிழமை சாம்பியன் பட்டத்துக்கு மோதுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments