FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

2027ல் இடிக்கப்படும் இத்தாலியின் 100 ஆண்டுகள் பழமையான சான் சிரோ கால்பந்துத் திடல்!

இத்தாலியின் மிகவும் பழமையான சான் சிரோ கால்பந்துத் திடல் இடிக்கப்பட இருப்பது குறித்து...

56 வினாடிகள் முன்பு
சான் சிரோ கால்பந்துத் திடல் - AFP
பகிர்:

இத்தாலியின் நூறாண்டுகள் மிகவும் பழமையான சான் சிரோ கால்பந்துத் திடல் இடிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை 2027 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியுடன் முடிவுக்குக் கொண்டவர இருக்கிறார்கள்.

இத்தாலியில் மிலன் நகரில் சான் சிரோ மாவட்டத்தில் 1925ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1926 டிசம்பரில் இந்தத் திடல் திறக்கப்பட்டது. இதனை 1935, 1955, 1987–1990, 2015–2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பித்தும் வந்தனர்.

இத்தாலியின் மிகவும் புகழ்பெற்ற இரண்டு கிளப் அணிகள் (ஏசி மிலன், இன்டர் மிலன்) இந்தத் திடலை பயன்படுத்தி வந்தன. தற்போது இரண்டு அணிகளும் சேர்ந்து புதிய திடலை உருவாக்க முடிவெடுத்துள்ளன.

Advertisement

Advertisement

சான் சிரோ திடலில் உருளை வடிவ பாதைகள் மிகவும் கவனம் ஈர்க்கும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் மக்கள் நடந்துவரும்போது அந்தப் பாதைகளே சுழலும்படி தெரியும். இனிமேல் இதெல்லாம் இருக்காது என்பதால் மிலன் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்தத் திடலில் அதிகபட்சமாக 75,000 - 80,000 வரைக்கும் பார்வையாளர்கள் கால்பந்துப் போட்டியைப் பார்க்கும்படி உருவாக்கப்பட்டிருக்கும். ஐரோப்பியாவிலேயே இந்தத் திடல் மிகவும் பிரபலமானது.

நவீன பாதுகாப்பு வசதிக்காகவும் பழமையடைந்ததாலும் ஃபிஃபா விதிகளினை முறைப்படுத்தவும் இது இடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சான் சிரோ கால்பந்துத் திடல் - Photo by MIGUEL MEDINA / AFP)
summary

Italy’s 100-year-old San Siro football stadium to be demolished in 2027!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments